ATM: நீங்க தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைத் தவிர வேறு சில பரிவர்த்தனைளையும் செய்யலாம். இதனால்தான் குறைந்த பரிவர்த்தனை நடைபெறும் ஏடிஎம்களையும் வங்கிகள் நடத்தி வருகின்றன. பணப்பரிவர்த்தனை தவிர வேறு சில முக்கிய பரிவர்த்தனைகளையும் ஏடிஎம் மையத்தில் செய்யலாம்.
ஏடிஎம் இயந்திரம் ஒரு கம்ப்யூட்டரைஸ்டு இயந்திரம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை அணுகலாம். அக்கவுன்ட்கள், பணம் பெறுவதற்கு, பிற நிதி பரிவர்த்தனைகளை செய்வதற்கு வங்கிக் கிளைகளை தவிர்த்து விட்டு இந்த ஏடிஎம் இயந்திரங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

 ATM: நீங்க தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

உங்களது கார்டை செலுத்தி நீங்கள் செய்ய விரும்பும் பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கலாம்.

1. உங்களது வங்கிக்கணக்கின் மினி ஸ்டேட்மென்டை இந்த இயந்திரத்தில் பெறலாம். கடைசி 10 பரிவர்த்தனை விவரங்கள் இதில் இருக்கும்.

2. எஸ்பிஐ இணையதளத்தில், உங்களது எஸ்பிஐ டெபிட் கார்டில் இருந்து வேறொரு கார்டுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை மாற்றலாம். இந்த இலவச சேவையைப் பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை உங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு பணத்தை அனுப்பலாம்.

பரிவர்த்தனைக்கான எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லை. கஸ்டமர் டூ கஸ்டமருக்கு நாளொன்றுக்கு ரூ.40,000 அனுப்பலாம். உங்களுக்கு தேவைப்படுவது எஸ்பிஐ கிரெடி கார்டு, பின் நம்பர் மற்றும் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் கார்டு நம்பர்.

3. இந்தச் சேவை மூலம் நீங்கள் விசா கிரெடிட் கார்டுக்கான பணத்தை செலுத்தலாம். பேப்பர்லெஸ் பேமெண்ட் மூலம் உங்களது கிரெடிட் கார்டு பில்லை செலுத்தலாம்.

4. அக்கவுன்ட்களுக்கிடையே பணத்தை மாற்றலாம். 16 இலக்க அக்கவுன்ட் நம்பரை உங்களது கார்டுடன் இணைக்க வேண்டும்.

5. எல்ஐசி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ லைப் போன்ற நிறுவனங்களின் பாலிஸிக்கான பிரீமியம் தொகையை ஏடிஎம் இயந்திரம் மூலம் செலுத்தலாம். உங்கள் கையில் பாலிஸி எண்ணை வைத்திருக்க வேண்டும்.

 ATM: நீங்க தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

6. உங்களுக்குத் தேவையான செக் புக்கை வங்கிக்குச் செல்லாமலே நீங்கள் பெறலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட முகவரியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏடிஎம் மூலம் விண்ணப்பித்தால் அந்த முகவரிக்கு செக் புக் போஸ்ட்டில் வந்துவிடும்.

7. ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்மில் டைனமிக் கரன்ஸி கன்வெர்ஷன் வசதி உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் பிடிக்கப்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

8. ஏடிஎம்மைப் பயன்படுத்தி உங்களது குடிநீர், மின்சாரம், சொத்துவரி போன்றவற்றை நேரடியாகச் செலுத்தலாம். உங்களது வங்கி கணக்கில் மின்வாரியம் போன்ற கணக்குகளை பதிவு செய்திருந்தால் எளிதாக கட்டணங்களை ஏடிஎம் மூலமாகச் செலுத்தலாம்.

9. மொபைல் மூலம் நீங்கள் மொபைல் பேங்கிங் வசதிக்காக பதிவு செய்யலாம். இதனால் வங்கிச் சேவைகளை நீங்கள் உங்களது மொபைலில் செய்யலாம். நீங்கள் நினைக்கும் நேரத்தில் உங்கள் மொபைலில் உள்ள பேங்கிங் அப்ளிகேஷனை நீக்கி விடலாம்.

10. ஏடிஎம் மையத்தில் உங்களது கார்டின் பின் நம்பரை மாற்றலாம். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை உங்களது பின் நம்பரை இவ்வாறு மாற்றுவது பாதுகாப்பான வழியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+