இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.
இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது . தற்போது இந்த மருத்துவ காப்பீடு தொகையை ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் . அதறகென சில நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன .அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் .

மத்திய அரசு தகுதியுள்ள குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆண்டு தோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேரக்கூடிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டு என்பது வழங்கப்படுகிறது . குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இந்த கார்டை காண்பித்து இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இது இணைத்து வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் தங்களுடைய ரேஷன் அட்டை அடிப்படையிலும் தங்களுடைய குடும்ப வருமானத்தின் அடிப்படையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பெற்று இருக்க வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு கடுமையான நோய்களுக்கும் இந்த காப்பீடு அட்டை மூலம் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் . புற்று நோய்கள் தொடங்கி பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையும் இலவசமாக பெற முடிகிறது.
உங்களுடைய குடும்பத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களுடைய ஆயுஷ்மான் பாரத் அட்டையில் ஓர் ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு தொகையை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தனியாக ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குகிறது.
உங்கள் வீட்டில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் கார்டு இருந்தால் உங்கள் வீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள் எனும் போது ஏற்கனவே இருக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டையை டாப் அப் செய்து மொத்தம் 10 லட்சம் ரூபாயாக உங்களுடைய காப்பீட்டை அப்கிரேட் செய்து கொள்ள முடியும். அந்த முதியவரின் ஆதாரை கொண்டு கேஒய்சி சரிபார்ப்பை முடித்தாலே அப்கிரேடு ஆகிவிடும். ஆயுஷ்மான் பாரத் அட்டை இல்லாத குடும்பங்களை சேர்ந்த முதியவர்கள் தனியாக தான் அட்டை பெற்று கொள்ள முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications