ஆயுஷ்மான் பாரத் யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. முன்னர் இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளில் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் சுகாதார காப்பீட்டை பெற முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மூத்த குடிமக்கள் யாரையும் சார்ந்திருக்காமல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சையைப் பெற முடியும். AB PM-JAY இன் கீழ், தகுதிபெறும் மூத்த குடிமக்களுக்கு புதிய, தனித்துவமான அட்டை வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் AB PM-JAY-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://abdm.gov.in/ என்பதைப் பார்வையிடவும்
ஸ்டெப் 2: அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் சரிபார்க்க உங்கள் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டை பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
ஸ்டெப் 3: கவரேஜுக்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்த, உங்கள் ரேஷன் கார்டு போன்ற குடும்ப அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 4: சரிபார்க்கப்பட்டதும், திட்டத்திற்கான தனித்துவமான AB-PMJAY ஐடி உங்களுக்கு ஒதுக்கப்படும்.
ஸ்டெப் 5: AB-PMJAY ஐடியைக் கொண்ட உங்கள் டிஜிட்டல் கார்டை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் எந்தெந்த மருத்துவ கட்டணங்கள் அடங்கும்?: மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகள், மருத்துவமனை அனுமதிக்கப்படுவதற்கும் முன்பு மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கான கட்டணம், மருந்துகள், தீவிர சிகிச்சை சேவைகள், நோயை கண்டறிதல், ஆய்வக செலவுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது தங்கும் இடத்திற்கான செலவுகள், உணவுக்கான செலவுகள், சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகள் போன்றவற்றிற்கான செலவுகளை இந்த திட்டம் உள்ளடக்கியது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனையை கண்டுபிடிப்பது எப்படி?: உங்கள் பகுதியில் உள்ள ஆயுஷ்மான் கார்டை எந்த மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றன என்பதை ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.
ஸ்டெப் 1: முதலில் pmjay.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் இருக்கும் "Find Hospital" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: நீங்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்.
ஸ்டெப் 5: திரையில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும். உங்கள் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலைப் பார்க்க "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் ஊரில் இருக்கும் ஆயுஷ்மான் பாரத் கார்டை ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனைகளின் லிஸ்ட் காண்பிக்கப்படும்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications