எதிர்பாராத நோய்களின் போது மருத்துவச் செலவுகள் கைக்கு மீறி சென்று விடும். எனவே முன்னெச்சரிக்கையாக பலர் உடல் நலக் காப்பீட்டை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதை எல்லாராலும் வாங்க முடியாது. இதை உணர்ந்து இந்திய அரசாங்கம் 2018-ஆம் ஆண்டு "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை (AB PM-JAY) அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது, 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு நிதிப் பாதுகாப்பையும், தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக மருத்துவச் செலவுகளால் யாரும் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காக அரசாங்கத்தின் முயற்சியாக செயல்படுகிறது.

இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டமானது சுமார் 4.5 கோடி குடும்பங்கள் மற்றும் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை வழங்கி வருகிறது.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் CGHS, ஆயுஷ்மான் CAPF அல்லது ECHS போன்ற திட்டங்களில் இருந்து தற்போது பயனடையும் நபர்கள் தங்களின் தற்போதைய திட்டத்தை தொடரலாம் அல்லது AB-PMJAY திட்டத்திற்கு மாறலாம்.
மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?:
ஸ்டெப் 1: ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான உங்கள் தகுதியை சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://abdm.gov.in ஐப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் சரிபார்க்க உங்கள் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டை பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
ஸ்டெப் 3: கவரேஜுக்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்த, உங்கள் ரேஷன் கார்டு போன்ற குடும்ப அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 4: சரிபார்க்கப்பட்டதும், திட்டத்திற்கான தனித்துவமான AB-PMJAY ஐடி உங்களுக்கு ஒதுக்கப்படும்.
ஸ்டெப் 5: AB-PMJAY ஐடியைக் கொண்ட உங்கள் டிஜிட்டல் கார்டை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது தனியார் மருத்துவக் காப்பீட்டை வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உடல்நலத் தேவைகளை, எந்த வித நிதி சுமையுமின்றி பூர்த்தி செய்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications