சென்னை: பணத்தை சேமிப்பது குறித்து சொல்லி வளர்க்காத பெற்றோர்களே இருக்க முடியாது. எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிக்க சேமிப்பு முக்கியமான ஒன்றாகும். அதற்கு ஒருவர் பணத்தை சேமிப்பது எப்படி என்பதையும், சேமித்த பணத்தை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த கவலையும் இல்லாமல், வாழ்க்கையை கழிக்க முடியும். எனவே, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்களை விட கடினமாக வேலை செய்ய வைப்பது எப்படி.. என்பதைப் பார்ப்போம்.
பணத்தை சேமிப்பதற்கான யுக்திகள்: எவ்வளவு பணத்தை மாதந்தோறும் சேமிக்க வேண்டும் என்று நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள், "செலவு செய்த பிறகு மீதமுள்ள பணத்தை சேமிக்காதீர்கள், சேமித்த பிறகு மீதமுள்ள பணத்தை செலவு செய்யுங்கள்". இவருடைய கூற்றுப்படி, சம்பளம் அல்லது வேறு வருமானம் வரும்போது, முதலில் பணத்தை சேமித்துவிட்டு, பின்னர் மிச்சமிருக்கும் பணத்தை செலவு செய்யுங்கள். சேமிப்பதற்கு சிறிது கட்டுப்பாடு அவசியமாகிறது.

பணத்தை சேமிப்பது மட்டும் போதுமா என்று நீங்கள் கேட்கும் கேள்வி கேட்கிறது. பணத்தை சேமிப்பது மட்டும் போதாது. ஏனெனில் பணவீக்கம் (Inflation) காலப்போக்கில் அதிகரித்து வருவதையும் கவனிக்க வேண்டும். பணவீக்கம், ஆண்டுதோறும் 6 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் இன்றைய ரூ.1 லட்சம் ரூபாயின் மதிப்பு, இன்னும் 10 ஆண்டுகளில் ரூ. 54,000 ரூபாயாக குறையும் வாய்ப்புள்ளது. நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கு சேமிப்பது மட்டும் போதுமானதாக இருக்காது.
உங்கள் பணத்தை எப்படி அதிகரிப்பது: உங்கள் பணம் காலப்போக்கில் அதிகரித்து, அதன் மதிப்பு குறையாமல் இருக்க வேண்டுமானால், உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு, உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும். குறுகிய கால பணத்தேவைக்கு, நீங்கள் நிலையான வைப்புத்தொகைகள் (FD-கள்), அரசாங்க பத்திரங்கள் (Government Bonds) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
பணவீக்கத்திற்கு எதிராக லாபம் பெறுவதற்கான வழி: ஈக்விட்டி ஃபண்டுகளில், முதலீடு செய்வது லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. அதிகமாக வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் அபாயமும் கலந்து தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். SIP திட்டங்கள் சிறந்த முதலீட்டு முறையாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஸ்டேப் அப் SIP முதலீடுகளையும் கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications