அரசுக்கு சொந்தமான நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது திறனை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிஎஸ்என்எல் சிம்மை வீட்டிலேயே பெறும் வாய்ப்பை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப் மூலமாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். கடந்த ஜூலை மாதம், நாட்டின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகரித்தன. இது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
அந்த நேரத்தில் பலர் தங்களின் சிம் கார்டை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்துள்ளனர். புதிதாக பிஎஸ்என்எல் சிம் எடுத்தவர்களும் ஏராளம். தற்போது பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1 லட்சம் 5G டவர்களை நிறுவுவதன் மூலம் மீண்டும் களத்தில் முக்கிய இடத்திற்கு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களை கவர புது முயற்சியை எடுத்துள்ளது.

அதன்படி, நீங்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே பிஎஸ்என்எல் சிம்மை ஆர்டர் செய்யலாம். அது உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்.
பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 5ஜி டவர்களின் வருகையுடன், இந்த சேவை 4ஜி சிம் கார்டுகள் மூலமாகவும் கிடைக்கும். பிஎஸ்என்எல் குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்து வருகிறது. சிம் கார்டைப் பெற இன்று பயணம் செய்து பிஎஸ்என்எல் மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பிஎஸ்என்எல் இன் LILO என்ற ஆப்ஸ் மூலமாக சிம் கார்டை முன்பதிவு செய்யலாம். இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
இந்த ஆப்ஸ் மூலம் நீங்கள் புதிய பிஎஸ்என்எல் 4G சிம் வாங்கலாம். ஏற்கனவே உள்ள உங்கள் மொபைல் எண்ணை போர்ட் அவுட்டும் செய்யலாம். சிம்மை ஆன்லனில் ஆர்டர் செய்யலாம். இது ஹோம் டெலிவரி செய்யப்படும். இந்த அப்ளிகேஷன் மூலம் பிஎஸ்என்எல்லின் புதிய சிம் கார்டுக்கு ஆர்டர் செய்யலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
*ஆப்ஸில் பிஎஸ்என்எல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
*4ஜி சிம்மிற்கு அப்டேட் செய்யவும், புதிய சிம் பெறவும் மற்றும் போர்ட் டு BSNL விருப்பங்களும் உள்ளன
*4ஜி சிம் கார்டு தேவைப்பட்டால், அந்த விருப்பத்தை கிளிக் செய்யவும்
*பின்னர் முகவரியை உள்ளிடவும், சிம் கார்டு வீட்டிற்கு வரும்.
*உங்கள் தற்போதைய எண்ணை நீங்கள் போர்ட் செய்ய விரும்பினால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, இதே முறையில் செயல்முறையை முடிக்கவும்
அதேபோல், நீங்கள் வாட்ஸ்அப் மூலம் பிஎஸ்என்எல் 4G சிம் கார்டையும் ஆர்டர் செய்யலாம். இதற்கு 'ஹாய்' என டைப் செய்து '8891767525' என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும். பின்னர் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்முறையை முடிக்கவும். சிம் கார்டு உங்களை வந்தடையும். இங்கேயும் நீங்கள் ஆப்ஸில் உள்ள அதேபோன்ற ஆப்சன்கள் கொடுக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications