நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் சொந்தமாக புது வீடு கட்டி அல்லது கட்டிய வீட்டை வாங்கி குடியேற வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பார்கள். ஒரு சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்கே பல லட்ச ரூபாய் தேவைப்படும். மொத்த பணத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் வீடு கட்ட தொடங்குவேன் என்றால் பலருக்கும் வீடு கட்டுவது என்பது எப்போதும் கனவாகவே இருந்து விடும்.
எனவே இப்போது பெரும்பான்மை மக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டு கடன் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். பெரியவர்களிடம் நாம் பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை கேட்கும்போது, அவர்கள் ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது என்று சொல்லி இருப்பதே நாம் கேட்டு இருப்போம். அது வீட்டு கடன் வாங்குவது தொடர்பான விஷயத்துக்கு மிகவும் பொருந்தும்.

அதாவது நம்முடைய மொத்த வருமானம் என்ன?, மாதந்தோறும் குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது? இஎம்ஐ செலுத்த போதுமான பணம் மிச்சம் இருக்குமா என்பது போன்ற விஷயங்களை கணக்கில் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற கதையாக வீட்டு கடன் எடுத்து வீடு கட்டினால் அது பின்னால் நமக்கு பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, 2025ம் ஆண்டில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் முதலில் தங்களது கடனை திருப்பி செலுத்தும் திறனை கண்டறிய உதவும் டிடிஐ = (கடன் / வருமானம்) x 100 மற்றும் வீட்டு வாடகை காட்டிலும் சொத்தை வாங்குவது லாபமா என்பதை கணக்கிட உதவும் வாடகைக்கு விலை விகிதம் = சொத்துவிலை/ஆண்டு வாடகை ஆகியவற்றை பார்முலாவை கணக்கிட்டு திட்டமிட வேண்டும்.
28/36 என்பது விதி என்று அழைக்கப்பட்டாலும் இது சட்டம் அல்ல, உண்மையில் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. அடமானக் கடன் வழங்குபவர்கள் இந்த விதியை பயன்படுத்தி, நீங்கள் பொதுவான அடமான வகை கடனை வாங்கினால், நீங்கள் எவ்வளவு மதிப்பிலான வீட்டை வாங்க முடியும் என்பதை தீர்மானிக்கிறார்கள். மேலும் உங்கள் நிதி நிலைமையையும், கடனை திருப்பி செலுத்தும் திறனையும் மதிப்பீடு செய்ய பயன்படுகிறது.
அதன் பிறகு பட்ஜெட்டுக்கு 28/36 விதியை பின்பற்ற வேண்டும். 28/36 விதி அடமானத்தின் முன் இறுதி மற்றும் பின்-இறுதி விகிதங்கள் எனப்படுவதை பிரதிபலிக்கிறது. முன் இறுதி விகிதம் (28 சதவீதம்) வீட்டு வசதிக்கு (ஹவுசிங் லோன்) நீங்கள் செலவிட வேண்டிய மொத்த மாதாந்திர வருமானத்தின் அதிகபட்ச சதவீதம்.
பின் இறுதி விகிதம் (36 சதவீதம்) வீட்டுவசதி உட்பட உங்கள் அனைத்து கடனுக்கும் நீங்கள் செலவிட வேண்டிய மொத்த மாதாந்திர வருமானத்தின் அதிகபட்ச சதவீதம். இது உங்கள் டிடிஐ அல்லது வருமானத்தில் கடன் விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது.
முன்பணம் செலுத்த 20 சதவீத சேமிப்பு பயன்படுத்துதல், 10 சதவீதம் மறைக்கப்பட்ட செலவுகள கணக்கிடுதல் மற்றும் எல்டிவி மற்றும் இஎம்ஐ கணக்கீடுகளை பயன்படுத்துவது நிதி ரீதியாக சிறந்த, மானியத்திற்கு தகுதியான வீட்டு உரிமை மற்றும் நீண்ட கால முதலீட்டு மதிப்பை உறுதி செய்கிறது. எனவே இந்த ஆண்டில் புதிதாக வீடு வாங்க நினைப்பவர்கள் மேற்கண்ட பார்முலா மற்றும் 28/36 விதியை பினபற்றுவது பயன் உள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications