உடனே உங்கள் பிஎஃப் கணக்கின் பேலென்ஸ் செக் பண்ணுங்க.. 4 ஈசியான வழி..!!

நம் நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்துகின்றன. நம் நாட்டில் ஓய்வூகாலத்திற்காக சேமிப்பதற்கான முதன்மையான வழிகளில் ஒன்றாக பி.எஃப். கருதப்படுகிறது.

முன்பு தொழிலாளர்கள் தங்களது பி.எஃப். கணக்கு இருப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தங்கள் முதலாளிகளால் பகிரப்பட்ட வருடாந்திர இ.பி.எஃப். அறிக்கையை நம்பி இருந்தனர். ஆனால் தற்போது மிஸ்டு கால் உள்பட பல வழிகளில் எளிதாக பி.எஃப். இருப்பை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

உடனே உங்கள் பிஎஃப் கணக்கின் பேலென்ஸ் செக் பண்ணுங்க.. 4 ஈசியான வழி..!!

பி.எஃப். இருப்பை சாிபார்ப்பதற்கான வழிமுறைகள்

மிஸ்டு கால்: UAN வலைதளத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, உங்கள் UANக்கான கே.ஒய்.சி.ஐ முடித்திருந்தால், பி.எஃப். இருப்பை சரிபார்க்கலாம். உங்கள் UAN உடன் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 எண்ணுக்கு அழைக்க வேண்டும். இரண்டு ரிங்களுக்கு பிறகு அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். சிறிது நேரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ். உங்கள் நம்பருக்கு வரும். அதில், உங்கள் பி.எஃப். இருப்பு மற்றும் பி.எஃப். கணக்கில் கடைசியாக செலுத்தப்பட்ட பங்களிப்பு பற்றிய விவரங்கள் இருக்கும்.

எஸ்.எம்.எஸ்.: நீங்கள் யு.ஏ.என். நம்பரை EPFOல் பதிவு செய்வதன் மூலம், எஸ்.எம்.எஸ். அனுப்பி உங்களது பி.எஃப். இருப்பை விரைவாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதில் UAN என்பது உங்களது தனிப்பட்ட யு.ஏ.என்., ENG என்பது நீங்கள் தகவல் பெற விரும்பும் மொழியின் முதல் மூன்று எழுத்து.

EPFO இணையதளம்: EPFO இணையதளத்தில் தொழிலாளர்களின் பி.எஃப். பாஸ்புக்கை பார்ப்பதற்கு வசதி உள்ளது. இந்த வசதியை பெற EPFO இணையதளத்திற்கு சென்று Our Services என்ற லிங்கினை கிளிக் செய்து பின்பு For Employees என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு Services என்பதை கிளிக் செய்து, Member Passbook என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு உங்களது பி.எஃப். பாஸ்புக்கை பார்க்க உங்களது யு.ஏ.என். மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்தால் பாஸ்புக்கை பார்க்கலாம். இந்த சேவைகளை பயன்படுத்த உங்கள் யு.ஏ.என்.-ஐ உங்கள் முதலாளி சரிபார்த்து செயல்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Umang App: தொழிலாளர்கள் தங்களது பி.எஃப். இருப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள Umang ஆப் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். உங்களது மொபைல் நம்பருக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்டை உமாங் ஆப்பில் டைப் செய்து அதன் பிறகு பி.எஃப். இருப்பை சரிபார்ப்பு பணியை தொடங்க வேண்டும். இந்த ஆப் மூலம் இ.பி.எஃப். பாஸ் புத்தகத்தினையும் பார்க்கலாம். உங்கள் கணக்கிலிருந்து க்ளைம் செய்ய உரிமை கோரலாம் மற்றும் க்ளைம் செய்ததை டிராக் செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+