இன்றெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் SIP திட்டங்களைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். SIP திட்டங்களை பெரும்பாலான முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்யாமல் மாதாந்திர, வருடாந்திர மற்றும் தினசரி அடிப்படையில் இதில் முதலீடு செய்ய முடியும். தற்போது சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தினசரி எஸ்ஐபி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஒருவர் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் டெபாசிட் செய்ய முடியும். தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது சில ஆய்வுகள் நீங்கள் எஸ்ஐபி திட்டங்களில் எவ்வளவு அடிக்கடி முதலீடு செய்கிறீர்கள் என்பதை எல்லாம் பொறுத்து வருமானத்தில் மாற்றம் இருக்காது எனக் கூறுகின்றன. அதாவது தினசரி அடிப்படையில், வாரம் தோறும் அல்லது மாதம்தோறும் முதலீடு செய்கிறீர்களா? என்பதை எல்லாம் பொறுத்து உங்கள் வருமானத்தில் மாற்றம் இருக்காது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தினசரி அடிப்படையில் முதலீடு செய்தாலும் சரி, வாரத்திற்கு ஒருமுறை முதலீடு செய்தாலும் சரி அல்லது மாதத்திற்கு ஒரு முறை முதலீடு செய்தாலும் சரி கிடைக்கும் வருமானத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. இதற்கு காரணம் பங்குச்சந்தை தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படும். அதேபோல ஒவ்வொரு நாளும் எச்ஐபி திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களுக்கு முதலீடுகளை கண்காணிப்பது மிகவும் சிக்கலாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு முதலீடு செய்தீர்கள்? எந்த நிதியில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வது அதிக நேரத்தை எடுக்கும் விஷயமாக இருக்கலாம்.
அதிலும் மாத வருமானம் பெறுபவர்களாக இருந்தால்.. தினசரி எஸ்ஐபி ஏற்றதாக இருக்காது. ஏனெனில் அவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் வருமானம் கிடைக்கும். எனவே ஒவ்வொரு நாளும் சிறிய தொகையை எடுத்து முதலீடு செய்வது மாதாந்திர பட்ஜெட்டை நிர்வகிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே மாத சம்பளம் பெறுபவர்களுக்கு மாதாந்திர SIP மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தினசரி SIP-களின் மற்றொரு குறைபாடு என்னவென்றால் இவை சந்தை ஏற்ற இறக்கங்களால் அதிகம் பாதிக்கப்படலாம். தினசரி SIP-கள் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இவை அதிக ஏற்ற இறக்கம் கொண்டவையாக இருக்கும். இதன் விளைவாக இது போன்ற நிதிகளில் தினசரி அடிப்படையில் முதலீடு செய்வது மாதாந்திர முதலீடுகளுடன் ஒப்பிடும்போது அதிக ஏற்றம் அல்லது இறக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் தினசரி எஸ்ஐபி-கள் நிலையான வருமானத்தை வழங்க கூடியதாக இருக்கலாம்.
எனவே தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு தினசரி எஸ்ஐ-பிகள் பொருத்தமான தேர்வாக இருக்கும். ஆனால் மாதாந்திர சம்பளம் பெறும் தொழிலாளர்கள் மாதாந்திர SIP-களைத் தேர்ந்தெடுக்கலாம்.
தற்போது சிலருக்கும் ஒரு கேள்வி எழலாம். மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் பங்களிப்பு செய்தால் வருமானம் அதிகரிக்குமா? என்று.. கண்டிப்பாக எஸ்ஐபி-யில் அடிக்கடி முதலீடு செய்வது வருமானத்தை அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் ஆவண பராமரிப்பு மற்றும் வரி தாக்கங்கள் தொடர்பான சிக்கல்களையும் இவை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. எனவே உங்கள் நிதி நலனைக் கருத்தில் கொண்டுதான் முதலீட்டு முடிவு எடுக்க வேண்டும்.
SIP-யின் வகைகள்: மந்த்லி SIP, வீக்லி SIP, டெய்லி SIP என எஸ்ஐபிகள் மூன்று வகைப்படும். பெயரிலேயே இருப்பது போல மந்த்லி SIP என்பது மாதத்திற்கு ஒருமுறை முதலீடு செய்வது, வீக்லி SIP என்பது வாராந்திர அடிப்படையில் முதலீடு செய்வது, டெய்லி SIP என்பது தினசரி அடிப்படையில் முதலீடு செய்வது.
பல முதலீட்டு தளங்கள் மாதாந்திர SIP திட்டங்களை வழங்கினாலும் அதன் நம்பகத்தன்மை குறித்து சரி பார்த்துக் கொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் மாதாந்திர SIP திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகை மறு மாதம் வந்தவுடன் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். மேலும் மாதாந்திர SIP திட்டத்தில் வருடத்திற்கு 12 முறை பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டி வரலாம். ஆனால் வாராந்திர sip திட்டத்தை பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்கு 52 முறை பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். இது கொஞ்சம் சிக்கல் தரக்கூடிய விஷயமாக இருக்கலாம்.
எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் நிதி நலனை நன்கு ஆராய்ந்து நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும். மேலே கூறப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் தினசரி எஸ்ஐபி திட்டங்களை பற்றிய விபரங்களே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. நன்கு யோசித்து உங்கள் நிதி நலனுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications