மத்திய அரசு வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் இந்திய மக்கள் தங்களது கிரெடிட் கார்டு-களை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூலிக்கும் (TCS) நடைமுறையை ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த வரி விதிப்பு மக்களை எப்படி பாதிக்கும்..? எப்படி ஒவ்வொரு செலவுகளையும் கணக்கிடப்படுகிறது..? ஆகிய கேள்விகளுக்கான பதிலும் மோடி அரசின் கிரெடிட் கார்டு பயன்பாட்டின் மீதான 20% வரி குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

முதலில் TDS, TCS என்ற இரு வரி வசூல் முறை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள் இதில் TDS என்பது தனிநபரின் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிப்பது. TCS என்பது ஒரு பொருளை வாங்கும் போது விற்பனையாளர் வசூலிப்பது, விற்பனையாளர் வசூலித்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.
உதாரணம் 1 : அருண் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரெடிட் லிமிட் கொண்ட கிரெடிட் கார்டு வைத்துள்ளார். இந்த கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு துபாய்-க்கு சுற்றுலா செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கு ஹோட்டல் பில், ஷாப்பிங், தங்கும் இடம், கேப் உட்பட அனைத்திற்கும் கிரெடிட் கார்ட்-ஐ பயன்படுத்துகிறார்.
மொத்த செலவு 2.5 லட்சம் எனில் 20 சதவீதம் TCS வரியான 50000 ரூபாயை சேர்ந்து 3 லட்சம் அவருடைய கிரெடிட் தொகையில் இருந்து கழிக்கப்படும். இந்த 50000 ரூபாய் கிரெடிட் கார்டு கொடுத்த வங்கி அரசிடம் அருண் உடைய பான் எண் இணைக்கப்பட்ட வருமான வரி கணக்கில் செலுத்தும். இந்த வரியை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது கிளைம் அல்லது அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளலாம்.
உதாரணம் 2: Sweety priya என்பவர் வெளிநாட்டு எண்டர்டெயின்மென்ட் சேவைகள் அல்லது சாப்ட்வேர்-ஐ இந்தியாவில் இருந்து ஆன்லைனில் மூலமாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குகிறார் என்றால் இதற்கும் 20 சதவீதம் டிசிஎஸ் பொருந்தும்.
1000 ரூபாய் செலுத்தினாலும் 200 ரூபாய் டிசிஎஸ் கழிக்கப்படும், இந்த 200 ரூபாய் கிரெடிட் கார்டு கொடுத்த வங்கி Sweety priya பான் எண் இணைக்கப்பட்ட வருமான வரி கணக்கில் செலுத்தும்.
இந்த மத்திய அரசின் இந்த 20 சதவீதம் டிசிஎஸ் வரி விதிப்புக்கு முக்கிய காரணமாக சிலவற்றை கூறப்படுகிறது.
1). பணக்காரர்கள் மற்றும் HNI மீது அதிக வரி விதிக்க வேண்டும்
2). மத்திய அரசின் TCS பணபுக்கத்தை அதிகரிக்க வேண்டும்
3). வரி அமைப்பிற்குள் அதிகமானோர் இணைக்கப்படுவார்கள்.
4). வரி ஏய்ப்பு குறையும்
5). உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாகவும் இதை பார்க்கப்படுகிறது

கல்வி செலவுகளை வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாட்டில் பேமெண்ட் செய்யும் போது அதற்கு தற்போது இருக்கும் 0.5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கு 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு.
இதேபோல் சொந்த பணத்தை கல்விக்காக செலவிடும்ம் போதும் தற்போது இருக்கும் 5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கு 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு. வெளிநாட்டில் மருத்து சிகிச்சைக்காக கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் போது தற்போது இருக்கும் 5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கும் 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு.
வெளிநாட்டு சுற்றுலா பேகேஜ் மற்றும் வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பேமெண்ட்-க்கு முன் 5 சதவீதம் வரையிலான TCS வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது, இதேபோல் இவ்விரு பிரிவுக்கும் எவ்விதமான நிதி கட்டுப்பாடும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. 20 சதவீத வரி விதிப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலக்கு வரும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications