ஈரான் போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து நின்று போயிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அரசு வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் முதல் கட்டமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரியை நிறுத்தி வைத்திருந்தன.
வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை தரப்படுகிறது. இதற்கிடையே மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளிகளையும் சற்றே அதிகரித்தது. நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களாகவும் கிராமப்புறங்களுக்கு 45 நாள்களாவும் நீட்டிக்கப்பட்டது. இருந்தாலும் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தும் தங்களுக்கு இதுவரை சிலிண்டர் கிடைக்கவில்லை, தங்களால் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியவில்லை என தொடர்ச்சியாக புகார்களை கூறிய வண்ணம் இருக்கின்றனர்.

எல்பிஜி பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள், பேச்சுலர்களாக தங்கி இருப்பவர்கள் தான். உணவகங்களில் உணவுகளின் விலைகள் கூடிவிட்டன, உணவு பட்டியலை குறைத்துவிட்டனர் இப்படி பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். வீட்டு பயன்பாட்டாளர்களும் சிலிண்டர் கிடைக்கவில்லை என்கின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் தீர்வாக அமைந்துள்ளது மினி சிலிண்டர்கள். பாரத் கேஸ் நிறுவனம் மினி (Bharat Gas Mini) என்ற பெயரிலும், ஹெச்பி கேஸ் அப்பு கேஸ் என்ற பெயரிலும் ( HP Appu Gas) இண்டேன் கேஸ் சோட்டூ( Indane Chhotu ) என்ற பெயரிலும் மினி சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.

5 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டர்களை நாம் நேரடியாக கேஸ் ஏஜென்சிகளில் சென்று வாங்கி கொள்ளலாம். இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும், எப்போது கேஸ் வரும் என காத்திருக்க வேண்டும் என்ற தேவைகள் இல்லை. நேரடியாக ஏஜென்சிக்கு சென்று இந்த மினி சிலிண்டர்களை வாங்கி கொள்ளலாம்.
அனைத்து கேஸ் ஏஜென்சிகளிலும் மினி சிலிண்டர்கள் கிடைக்கின்றன. இது சிறிய அளவாக இருப்பதால் பொதுமக்கள் தாங்களாகவே ஒரு பைக்கில் சென்று கொண்டு வந்துவிடலாம். இந்த ஐந்து கிலோ எடை கொண்ட சிலிண்டரை பெறுவதற்கு எந்த ஒரு முகவரி சான்றும் தேவையில்லை ஏதேனும் ஒரு அடையாள சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தாலே போதும். இது தடையற்ற வர்த்தக எல்பிஜி வகையை சேர்ந்தது என்பதால் ஒரு இடத்தில் வாங்கி மற்ற இடத்தில் அதனை நிரப்பி கொள்ளக்கூடிய சுதந்திரமும் உள்ளது.
எரிவாயு தீர்ந்து விட்டால் பழைய சிலிண்டரை கொண்டு சென்று புதியதை பெற்றுக் கொள்ளலாம் சில குறிப்பிட்ட கேஸ் ஏஜென்சி என மட்டும் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் இது கிடைக்கிறது. பேச்சுலர்கள், கல்லூரி மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், டிரக்கிங் செல்பவர்கள், அடிக்கடி ஊர் மாறுபவர்களுக்கு இது உதவும்.
தற்போது வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் முன்பதிவு செய்து கிடைக்காதவர்களுக்கும் கூட அவசர தேவைக்கு மினி சிலிண்டர்கள் கை கொடுக்கின்றன. அடையாள சான்றிதழை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தினாலே சிலிண்டர் கிடைத்துவிடும். எண்ணெய் நிறுவனங்களும் இவ்வகை சிலிண்டர்கள் விற்பனையை தற்போது அதிகம் ஊக்குவிக்கின்றன.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications

