இந்தியாவில் ஓய்வூதியம் பெறக்கூடிய அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்களுடைய லைஃப் சர்டிபிகேட் எனப்படும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் . அவ்வாறு சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.
வழக்கமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு ஓய்வூதியதாரர்கள் வங்கி, ஈபிஎஃப்ஓ அலுவலகம் என பல இடங்களுக்கு சென்று அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே இலவசமாக வாழ்நாள் சான்றிதழை பெறலாம் . ஈபிஎஸ் எனப்படும் எம்பிளாயி பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் டிஜிட்டல் லைவ் சர்டிபிகேட்டை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான பணிகளை ஈபிஎப்ஓ அமைப்பு தொடங்கியிருக்கிறது.

இந்திய தபால் துறைக்கு சொந்தமான இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஜீவன் பிரமாண் எனப்படும் டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்டை ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வதற்கான சேவையை நடத்தி வருகிறது . ஆனால் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானவர்கள் இந்த சேவையை பயன்படுத்தாமல் அலைந்து திரிகின்றனர். தற்போது ஈபிஎஃப் அமைப்பு இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து அனைத்து ஈபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கும் டிஜிட்டல் முறையிலான வாழ்நாள் சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதன்படி இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை சேர்ந்தவர்கள் உங்களுடைய வீடுகளுக்கே வந்து முக அடையாளம், கைவிரல் பதிவு உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களையும் உங்களுடைய ஆதார் அடிப்படையிலான தகவல்களையும் ஆய்வு செய்து உங்களுக்கான டிஜிட்டல் லைவ் சர்டிபிஃகேட் எனப்படும் வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையிலேயே பெற்று தந்து விடுவார்கள். இதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஏரியாவுக்கு உட்பட்ட தபால் நிலையத்தின் போஸ்ட்மேன் அல்லது தபால் நிலையத்தை தொடர்புகொண்டு தனக்கு லைஃப் சர்டிபிகேட் எனப்படும் ஆயுள் சான்றிதழ் தேவை என குறிப்பிட வேண்டும். இதனை அடுத்து இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள் உங்களின் வீட்டிற்கே வருகை தருவார்கள்.
அவர்களிடம் உங்களின் ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய விபரங்கள் ஆகியவற்றை வழங்கினால் அவர்கள் ஆய்வு செய்து பயோமெட்ரிக் விவரங்களோடு அவற்றை சரி பார்ப்பார்கள். இந்த சரிபார்ப்பு நடந்த உடன் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும். இதனை அடுத்து https://jeevanpramaan.gov.in/v1.0/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய ஜீவன் பிரமான் எனப்படும் லைஃப் சர்டிபிகேட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக எங்கும் அலையவும் வேண்டாம் எந்த கட்டணமும் செலுத்தவும் வேண்டாம்.


Click it and Unblock the Notifications