இந்தியாவில் ஆதார் என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி அரசின் நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக ஆதாரை கேட்கிறார்கள்.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பின் முன்னோடி திட்டமாக ஆதாரை உலக நாடுகள் பார்க்கின்றன. இந்தியாவை பின்பற்றி பல்வேறு நாடுகளும் ஆதார் போன்ற ஒரு அடையாள ஆவண முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளன. கோடிக்கணக்கிலான இந்தியர்களின் தனிநபர் அடையாளங்களை பாதுகாத்து பல்வேறு சேவைகளை ஆதார் வழங்குகிறது.

இந்தியாவில் ஆதாரை UIDAI அமைப்பு தான் மேலாண்மை செய்து வருகிறது. இந்த அமைப்பு ஆதார் தொடர்பான தேசிய அளவிலான ஒரு போட்டியை அறிவித்து இருக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறக்கூடிய நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
ஆதார் அமைப்பை மையமாக கொண்டு ஒரு கிரியேட்டிவான Mascotஐ வடிவமைக்க வேண்டும். இந்த மாஸ்காட் கிரியேட்டிவாக இருப்பதோடு ஈஸியாக மக்களுடன் கனெக்ட் ஆகி அதே வேளையில் ஆதார் அமைப்பின் மைய கருத்தையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் ஒரு வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுஐடிஏஐ அமைப்பு இதற்காக My Gov தளத்துடன் கை கோர்த்துள்ளது. பொதுமக்கள் My Gov தளம் வாயிலாக மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். வரும் 31 ஆம் தேதி தான் மாஸ்காட் வடிவமைப்புகளை சப்மிட் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
இந்த போட்டியில் தனிநபர்களும் , குழுவாகவும் கலந்து கொள்ளலாம். ஆதாரின் நம்பிக்கை, டிஜிட்டல் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை பிரதிபலிக்க கூடிய ஒரு மாஸ்காட்டாக இது இருக்க வேண்டும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள https://innovateindia.mygov.in/uidai-mascot-competition/ என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் Participate now என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களின் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்து உங்களின் டிசைனை தாக்கல் செய்ய வேண்டும்.
தாங்களாக சொந்தமாக வடிவமைத்த டிசைனை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இதன் உண்மையான கோப்பை எடிட்டெபிள் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசைனை தாக்கல் செய்யும் போது எந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது, மாஸ்கட்டின் பெயர் என்ற இந்த வடிவமைப்பு உணர்த்தும் தகவல் என்ன என்பதை விவரிக்கும் ஒரு ஆவணத்தையும் சப்மிட் செய்ய வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்பவரில் முதல் பரிசு பெறக்கூடிய நபருக்கு 50,000 ரூபாட் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு 30,000 ரூபாயும், மூன்றாவது இடம் பிடிப்பவருக்கு 20,000 ரூபாயும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான வடிவத்தை தாக்கல் செய்யும் நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications