சென்னை: இன்றைய நவீன யுகத்தில் ஒரு பெண் கருத்தரித்து குழந்தை பெற்று எடுத்து பின்னர் அந்த குழந்தையை வளர்த்தெடுப்பது வரை நிறைய செலவுகளை செய்ய வேண்டி இருக்கிறது. முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை, பிள்ளை வளர்ப்பு என்பது அதிக செலவு கொண்ட ஒரு விஷயமாகத்தான் மாறி இருக்கிறது.
அதிகரிக்கும் செலவு: குழந்தைக்கான டயப்பர் வாங்குவதற்காகவே மாதம் தோறும் பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய நிலையில் நவீன கால பெற்றோர்கள் இருக்கின்றனர். குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே பல பெற்றோரும் குழந்தைகளுக்கான சிறு சிறு பொம்மைகள், துணிமணிகளை வாங்கி வைக்கின்றனர் . குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப டயப்பர் வாங்க வேண்டும் ,அவர்கள் விளையாடுவதற்கு தேவையான பொம்மைகளை வாங்க வேண்டும் துணிமணிகளை வாங்க வேண்டும் என பல செலவுகள் இருக்கின்றன.

அமேசான் சலுகை: விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள போக இருக்கும் தாய்மார்களுக்கும் , சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் அமேசான் நிறுவனம் பிரத்தியேக சலுகையை வழங்குகிறது. அதைத்தான் தற்போது நாம் விரிவாக பார்க்க போகிறோம். இகாமர்ஸ் தளங்கள் நாம் நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் முறையையே பெருமளவில் மாற்றிவிட்டன. ஒரு பொருளை வாங்க கடைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை . நம் ஃபோனில் இந்த செயலி வாயிலாகவே வாங்கிக் கொள்கிறோம்.
ஆன்லைனில் விலை குறைவு: பல சமயங்களில் கடையில் வாங்கும் பொருட்களின் விலையை விட ஆன்லைனில் வாங்கக்கூடிய பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது என்பதுதான் உண்மை. தற்போது அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குயிக் காமர்ஸ் செயலிகள் பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கின்றன. இந்த போட்டியை சமாளிக்க இந்த நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அப்படித்தான் அமேசான் நிறுவனம் கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்களுக்கும் அண்மையில் குழந்தையை பெற்ற பெண்களுக்கும் என ஒரு பிரத்தியேக சலுகையை வழங்குகிறது.
என்ன சலுகை: இந்த திட்டத்தின் படி அமேசானில் குழந்தை சம்பந்தப்பட்ட பொருட்களை 15 சதவீத தள்ளுபடியில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் எந்த ஒரு மருத்துவ ஆவணமும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய டெலிவரி தேதிக்கு 60 நாட்கள் முன்னர் இருந்தும் குழந்தை பிறந்த பிறகு 90 நாட்கள் வரையிலும் இந்த 15 சதவீத தள்ளுபடியோடு குழந்தைக்கு தேவையான பொருட்களை நீங்கள் அமேசானில் வாங்க முடியும்.

எப்படி பெறுவது: இந்த சலுகையை பெறுவதற்கு https://www.amazon.in/baby-reg/?ref_=br_dsk_tbnr_br என்ற இந்த இணைய பக்கத்தில் சென்று நீங்கள் அமேசானில் உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் அதில் baby wishlist என்பது காட்டும் அதில் உங்கள் குழந்தைக்கு நீங்க வாங்க நினைக்கும் பொருட்களை baby wishlist இல் சேர்க்க வேண்டும். இதில் குறைந்தது 16,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நீங்க சேர்க்க வேண்டும். பின்னர் உங்களின் டெலிவரி தேதியை உள்ளிட வேண்டும்.
குழந்தை பொருட்களுக்கு தள்ளுபடி: இதனை அடுத்து குழந்தை பிறப்பு அதன் பின்னர் குழந்தைக்கு தேவைப்படும் பாட்டில், துணிமணி, டயப்பர் உள்ளிட்டவற்றின் பட்டியலே அமேசானே காட்டும் அதை பயன்படுத்தலாம் அல்லது சலுகைக்கு உட்பட்ட பிராண்டுகளில் நீங்களே தேர்வு செய்யலாம். உங்களுக்கான டிஸ்கவுண்ட் அன்லாக் ஆகிவிடும். இந்த baby wishlistஇல் இருக்கும் பொருட்களை ஆர்டர் செய்யும் போதெல்லாம் உங்களுக்கு 15% பிரத்தியேக தள்ளுபடி கிடைக்கும். பிரைம் மெம்பர்களுக்கு 15% , பிரைம் அல்லாத மெம்பர்களுக்கு 10% தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி பிராண்டுகள்: பேம்பர்ஸ், ஹக்கீஸ் , பிலிப்ஸ், ஹிமாலயா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பொருட்களை நாம் இந்த தள்ளுபடி விலையில் வாங்க முடியும் . அமேசான் நிறுவனம் இப்படி ஒரு தள்ளுபடி வழங்குவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் ஏற்கனவே கூறியது போல இந்தியாவில் குழந்தையை பெற்று வளர்ப்பதற்கான செலவு தற்போது அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு தள்ளுபடி வழங்குவதன் மூலம் அந்த பெற்றோர் தொடர்ந்து மூன்றிலிருந்து நான்கு மாத காலத்திற்கு அமேசானில் தான் பொருட்களை வாங்குவார்கள். இது நீடித்த ஒரு வாடிக்கையாளரை தருகிறது. மேலும் விற்பனையையும் உறுதி செய்கிறது.
அமேசானுக்கு என்ன லாபம்:அடுத்து இந்த சலுகைகாலம் முடிந்துவிட்டாலும் இவர்கள் பெரும்பாலும் அமேசான் வாயிலாக தான் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்வார்கள் ஏனெனில் அவர்கள் அதற்கு பழகி இருப்பார்கள் . இதுதான் அமேசான் இப்படி ஒரு சலுகை வழங்குவதற்கு முக்கிய காரணம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications