தற்போது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. அது மட்டுமல்ல இந்தியாவில் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாகவும் பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படக் கூடியது.
பான் நம்பர் எனப்படும் நிரந்தர கணக்கு எண் , எழுத்து மற்றும் எண்களை உள்ளடக்கிய பத்து இலக்கங்களை கொண்டிருக்கும்.

பொதுவாக நமக்கு வழங்கப்படக்கூடிய இந்த பான் கார்டுகள் நம்மைப் பற்றிய பல்வேறு தகவல்களை அளிக்க கூடியதாக இருக்கின்றன. 10 இலக்கங்களும் ஒவ்வொரு தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றன. பான் எண்ணை வைத்து அதன் உரிமையாளர் பற்றிய பல்வேறு தகவல்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
நம் தொலைபேசி எண்களை போன ரேண்டம் முறையில் உருவாக்கப்படுவது கிடையாது. விண்ணப்பம் செய்தவரின் தகவல்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தான் ஒருவருக்கான பான் எண் உருவாக்கப்படுகிறது. நம் பான் எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கமும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யும்போது, வங்கி கணக்கு தொடங்கும்போது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, ஒரு சொத்தினை வாங்குவது அல்லது விற்பனை செய்யும் போது என பல்வேறு செயல்களுக்கும் பான் கார்டு கேட்கப்படுகிறது.
உதாரணத்திற்கு AFZPK7190K இது தான் ஒருவருடைய பான் எண் என வைத்துக் கொள்வோம். இதன் ஒவ்வொரு இலக்கத்திற்கும் என்ன அர்த்தம் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பான் எண்ணில் உள்ள முதல் மூன்று இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாக இருக்கும். அவை AAA முதல் ZZZ என்ற தொடரை கொண்டு உருவாக்கப்படுகிறது.
பான் எண்ணில் நான்காவது இலக்கம், அதன் உரிமையாளர் யார் என்பதை விளக்குவதாக உள்ளது. நாம் குறிப்பிட்டுள்ள உதாரணத்தில் P இடம்பெற்றுள்ளது. இதற்கு இந்த பான் எண் தனிநபருடையது என அர்த்தம். அதுவே F என குறிப்பிட்டிருந்தால் அது ஒரு நிறுவனத்தின் பான் எண், C என குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியின் பான் எண், H என இருந்தால் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினரின் பான் எண் என அர்த்தம், T என்ற எழுத்து இடம்பெற்றிருந்தால் அது அறக்கட்டளையின் பான் எண் என நாம் புரிந்து கொள்ளலாம்.
ஐந்தாவதாக இருக்கக்கூடிய எழுத்து பான் உரிமையாளரின் குடும்ப பெயரின் அல்லது பெயரின் முதல் எழுத்து. நமது உதாரணத்தில் K என்ற எழுத்து உள்ளது. எனவே இது அந்த உரிமையாளரின் லாஸ்ட் நேம் அல்லது சர் நேமின் முதல் எழுத்து ஆகும்.
அடுத்து வரிசையாக நான்கு எண்கள் இடம்பெற்றிருக்கும். இது 0001 முதல் 9999 வரையிலான தொடர்களை கொண்டு வழங்கப்படுகிறது. இறுதியாக ஒரு ஆங்கில எழுத்துடன் பான் எண் நிறைவடையும்.
பான் எண் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்படுகிறது. எனவே அதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது முக்கியமாகும்.பான் எண்ணை வைத்தே பல தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் தான் வருமான வரித்துறை அதனை உருவாக்குகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications