சென்னை: இந்தியாவின் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக டி மார்ட் உருவெடுத்து இருக்கிறது. டி மார்ட் பல்வேறு நகரங்களிலும் தன்னுடைய கடைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.
டி மார்ட் என்றாலே நாம் கடைக்கு போவோம் ஷாப்பிங் செய்வோம் , பொருட்களை வாங்குவோம் என கிடையாது. பல்வேறு நபர்களும் டி மார்ட் வழியாக தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அது எப்படி என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நீங்கள் வீட்டிலேயே தரமான இனிப்பு தயாரிக்கிறார்கள் , அலங்கார பொருட்கள் போன்றவற்றை உங்களால் உற்பத்தி செய்ய முடிகிறது, ஊறுகாய் தயாரிக்க முடிகிறது எனும்போது நீங்கள் டி மார்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு உங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய முடியும். இதற்காக நீங்கள் விண்ணப்பம் செய்தால் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்.
டிமார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் Partner With Us என காட்டும் அதனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர் டிமார்ட் நிறுவனம் உங்களை தொடர்பு கொள்ளும்.

நீங்கள் தயாரிக்கும் பொருள் என்ன, அதனை எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யலாம், டிமார்ட் நிறுவனத்தூக்கு எவ்வளவு கமிஷன் உள்ளிட்டவற்றை எல்லாம் ஆய்வு செய்வார்கள் உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் என்றால் கட்டாயம் FSSAI சான்றிதழ் இருக்க வேண்டும். இருதரப்புக்கும் விலை , லாபம் உள்ளிட்டவற்றில் உடன்பாடு ஏற்பட்டால் உங்களுக்கு டிமார்ட் மூலம் பெரிய விற்பனை வாய்ப்பு கிடைக்கும்.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உங்கள் தயாரிப்பை பார்வையிடும் மற்றும் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இது உங்கள் தயாரிப்புகள் பலரை சென்று சேர்வதையும் , விற்பனை அதிகரிப்பதையும் உறுதி செய்கிறது. டிமார்ட் மூலம் நீங்கள் உங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது சொந்த மாநிலம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் உங்களுடைய பொருள் சென்று சேரும்.
அடுத்ததாக உங்களுக்கு சொந்தமான இடத்தை வாடகை விட்டு அல்லது டிமார்ட்க்கு விற்பனை செய்தும் பணம் பார்க்கலாம். உங்களுக்கு சொந்தமாக டிமார்ட் கடை வைக்கும் அளவுக்கு பெரிய இடம் இருக்கிறது எனில் டிமார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Partner With Us என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் இடத்தை வாடகைக்கு விட அல்லது விற்க என காட்டும் அதனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதும் டிமார்ட் நிறுவனமே உங்களை தொடர்பு கொள்ளும்.
இதனை அடுத்து டிமார்ட் நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து உங்களின் இடத்தை பார்வையிடுவார்கள். பின்னர் அந்த இடம் அவர்களுக்கு பொறுத்தமானதாக இருந்தால் வாடகை அல்லது லீசுக்கு எடுப்பது இல்லை என்றால் மொத்தமாக வாங்கி கொள்வது என்பதற்கான ஒப்பந்தம் போடப்படும்.


Click it and Unblock the Notifications