பெண் குழந்தைகளை வைத்துள்ள அனைவருக்கும் முக்கியமானது மற்றும் தெரிந்த ஒன்றுதான் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY). குழந்தைகள் எதிர்கால பாதுகாப்பிற்காக அரசு கொண்ட வந்த இந்த திட்டமானது 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கலாம். வங்கிகள் முதல் போஸ்ட் ஆபிஸ் வரை இந்த திட்டத்திற்கான அக்கவுண்டை தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இது பெண் குழந்தைகள் 21 வயதை கடக்கும்போது முதிர்ச்சி அடையும். இதில் நீங்கள் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2% ஆகும். இது உங்கள் மகளுக்கு சிறப்பான வட்டியுடன் அதிகமான வருமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஏற்கனவே நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்காக, இந்தக் கணக்கைத் திறந்திருந்தால், ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் இடமாற்றம் செய்திருந்தீர்களேயானால் தற்போது நீங்கள் வைத்துள்ள சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கையும் மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எப்படி நீங்கள் சுகன்யா சம்ரித்தி கணக்கை மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தற்போது சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை, போஸ்ட் ஆபிஸில் வைத்திருந்தாலும், வங்கியில் வைத்திருந்தாலும் மாற்றம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, நீங்கள் தற்போது வைத்துள்ள போஸ்ட் ஆபிஸ் கிளையிலிருந்து மற்றொரு போஸ்ட் ஆபிஸ் கிளைக்கு மாற்றலாம். அதேபோல், நீங்கள் தற்போது வைத்துள்ள வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கும் மாற்றிகொள்ளலாம். அதபோல், போஸ்ட் ஆபிஸ்களிலிருந்தும் வங்கிகளுக்கும், வங்கிகளிலிருந்து போஸ்ட் ஆபிஸ்களுக்கு உங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை எளிதில் மாற்றலாம்.
SSY கணக்கை எப்படி மாற்றுவது?: ஸ்டெப் 1: நீங்கள் ஏற்கனவே தொடங்கிய கணக்கின் கேஒய்சி ஆவணங்களுடன் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸுக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் கணக்கை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பெற்று கவனமாக நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 3: அந்த விண்ணப்பத்தில், நீங்கள் உங்கள் சுகன்யா கணக்கை மாற்ற விரும்பும் புதிய வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்.
ஸ்டெப் 4: பின்னர், அவைகள் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, கணக்கை மாற்றுவதற்கான செயல்முறையைடுத்து மாற்றப்படும். இதற்காக, உங்கள் கணக்கு தொடர்பான ஆவணங்களை நீங்கள் மாற்ற வேண்டிய கிளைக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்டெப் 5: உங்கள் கணக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் புதிய வங்கியை அடைந்தவுடன், உங்கள் கணக்கைத் திறக்கும் செயல்முறைகள் தொடங்கப்படும்.
ஸ்டெப் 6: இதனை தொடர்ந்து புதிய வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் உங்கள் கணக்கு மீண்டும் திறக்கப்படும். இதற்காக மீண்டும் புதிய விண்ணப்ப படிவங்களையும் கேஒய்சி ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வங்கி உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்த பின் உங்கள் கணக்கு வெற்றிகரமாக மாற்றப்படும்
ஆன்லைனில் நீங்கள் தற்போது சுகன்யா சம்ரித்தி கணக்கை தொடங்குவதற்கும் மாற்றுவதற்கும் தற்போது ஆப்சன்கள் இல்லை. ஆனால் கணக்கு தொடங்கப்பட்டவுடன், ஆன்லைனில் பணம் செலுத்தி கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சி ஆகும். இது பெண் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோருக்கு மிகவும் பயனுள்ள சேமிப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்த முதலீடு அதிக வட்டி விகிதங்கள் ஆகியன பெண் குழந்தைகளின் எதிர்காலம், கல்விச் செலவுகள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications