தமிழ்நாட்டில் பருவ மழை காலம் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது . இனி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு புயல், காற்றழுத்த தாழ்வு நிலை, கனமழை, சூறாவளி காற்று உள்ளிட்டவற்றை நாம் கட்டாயம் எதிர்கொள்ள போகிறோம்.
சென்னையில் வசிப்பவர்களுக்கு மழை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சாலை மற்றும் வீடுகளை சுற்றி தேங்க கூடிய மழை நீர் தான் . இவ்வாறு மழைநீர் தேங்கும் போது நம்முடைய கார் உள்ளிட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்குவது அல்லது வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்படுவது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு அவர்களுடைய வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்க கூடிய அபாயம் மிக அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு கார்கள் வெள்ளத்தில் சேதமடைந்தால் அதனை சரி செய்வதற்கு பெரிய தொகை செலவிட வேண்டும். இத்தகைய சூழலில் தான் மழை நீரில் நம்முடைய கார் மூழ்கினாலோ அல்லது வெள்ளத்தினால் இழுத்து செல்லப்பட்டு சேதம் அடைந்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கான காப்பீடு தொகையை நமக்கு வழங்குமா என்ற கேள்வி எழுகிறது.
கார்களுக்கான காப்பீடு என வரும் போது இரண்டு வகையான காப்பீடு இருக்கிறது ஒன்று third party insurance மற்றொன்று comprehensive பாலிசி. இந்த தேர்ட் பார்டி இன்சூரன்ஸ் அதாவது மூன்றாம் தரப்பு காப்பீடு திட்டம் மட்டும் நீங்கள் எடுத்திருந்தால் உங்களின் வாகனம் வேறு ஒரு வாகனமோ அல்லது சொத்தோ தனிநபரையோ இடித்து சேதப்படுத்தி இருந்தால் அதற்கான காப்பீட்டை மட்டுமே வழங்கும்,. உங்களுடைய வாகன சேதத்திற்கு காப்பீடு கிடைக்காது.
இதுவே காம்ப்ரிஹென்சிவ் எனப்படும் விரிவான காப்பீடு திட்டமாக இருந்தால் கவலை இல்லை. உங்களுடைய காருக்கு ஏற்பட்ட சேதத்தையும் மூன்றாம் தரப்பு வாகனம் மற்றும் சொத்துக்கு ஏற்பட்ட சேதத்திற்கும் சேர்ந்து காப்பீடு வழங்கும். உங்களுடைய பகுதியில் அடிக்கடி இயற்கை பேரிடர்கள் பேரிடர்கள் நிகழ்கின்றன. புயல், கன மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதியை சேர்ந்தவர் நீங்கள் என்றால் விரிவான காப்பீடு திட்டத்தை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது என காப்பீட்டு துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குறிப்பிட்ட சில ஏட் ஆன்களை சேர்த்துக்கொண்டால் எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் உங்களுடைய கார் சேதமடைகிறது என்பது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை என தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக ரோட் சைட் அசிஸ்டன்ட் மற்றும் என்ஜின் ப்ரொடெக்ஷன் காப்பீடு ஆகிய இரண்டும் தான் முக்கியம்.
என்ஜின் ப்ரொடக்ஷன் காப்பீடு நீங்கள் எடுத்திருந்தால் உங்களுடைய காரின் என்ஜின் மற்றும் அது சம்பந்தப்பட்ட பாகங்களில் ஏற்படக்கூடிய அனைத்து சேதங்களுக்கும் அல்லது என்ஜினை மாற்ற வேண்டும் என்றாலும் காப்பீட்டு நிறுவனம் அந்த தொகையை ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கின்றனர். சில விரிவான காப்பீடு திட்டங்களில் என்ஜின் ப்ரொடக்ஷன் சேர்ந்து வரும் இல்லை என்றால் அதனை ஏட் ஆன் முறையில் சேர்த்து கொள்வது நல்லது.

காப்பீடு எடுப்பதற்கு முன்னர் அல்லது ஏற்கனவே நீங்கள் எடுத்திருந்தாலும் உங்களுடைய சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவன முகவர்களை தொடர்பு கொண்டு என்ஜின் ப்ரொடக்ஷன் கவர் இருக்கிறதா என தெரிந்து கொள்வது நல்லது. இல்லையென்றால் அதை உங்கள் பாலிஸியோடு சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுகின்றனர் .
மேலும் உங்கள் பாலிசியில் என்ஜின் ப்ரொடக்ஷன் கவர் இல்லை எனும் போது கார் மழைநீரில் மூழ்கிவிட்டது என்றால் உடனடியாக காரை ஆன் செய்ய கூடாது என அறிவுரை வழங்குகின்றனர். அவ்வாறு ஆன் செய்தால் என்ஜினில் தண்ணீர் புகுந்து என்ஜின் மற்றும் அது சம்பந்தப்பட்ட பாகங்களை சேதமடைய செய்யும் , காப்பீட்டு நிறுவனங்கள் இதனை மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட சேதமாக கருதாமல் நீங்கள் காரை ஆன் செய்ததால் ஏற்பட்ட சேதம் என கூறி காப்பீடு வழங்காமல் நிராகரித்து விடும்.
எனவே உங்களுடைய கார் வெள்ளத்தில் சிக்கிவிட்டால் காரை ஆன் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. உங்களிடம் என்ஜின் ப்ரொடக்ஷன் கவர் இருக்கிறது என்றால் கவலைப்படாமல் நீங்கள் காரை ஆன் செய்யலாம். இது தனியாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் நிச்சயம் காப்பீடு தொகை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக உங்களுடைய கார் வெள்ளத்தில் மூழ்கி விட்டது அல்லது வெள்ளம் நிறைந்து சாலையில் பயணம் செய்யும்போது திடீரென நின்று விட்டது என்றால் உங்கள் காப்பீட்டில் ரோட் சைடு அசிஸ்டன்ஸ் சேர்ந்திருந்தால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்போது இந்த ரோட் சைடு அசிஸ்டன்ஸ் திட்டம் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களே நேரடியாக வந்து உங்களுடைய காரை வெள்ளத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து உடனடியாக காரை முழுவதுமாக பரிசோதனை செய்து ஏதேனும் சேதம் இருந்தால் சரி செய்து கொடுப்பார்கள்.
விரிவான காப்பீடு திட்டங்கள் வழக்கமாகவே வெள்ளம் ,நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய சேதங்களுக்கு காப்பீடு வழங்கும். அதே போல வாகனம் விபத்தில் சிக்கிவிட்டது தீ பற்றி விட்டது அல்லது களவு போய்விட்டது என்றாலும் காப்பீடு கிடைக்கும் . ஆனால் மூன்றாம் தரப்பு காப்பீடு திட்டங்களை விட விரிவான காப்பீடு திட்டங்களின் பிரீமியம் அதிகமாக இருக்கும் .
உங்களிடம் என்ஜின் ப்ரொடக்ஷன் கவர் இருக்கிறது கார் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து விட்டது என்றால் காப்பீடு கோரி விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக கார் வெள்ளத்தில் சிக்கியது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் உங்களுடைய மொபைல் ஃபோனில் எடுத்து வைத்து கொள்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications