ஆர்பிஐ வழங்கும் அசத்தலான திட்டம்! 8.05% வட்டி விகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட் பாத்திரம்! பெத்த லாபம்!

கையில் பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும், ஆனால் அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகை பத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவருக்கு ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் (Floating Rate Savings Bond) உதவியானதாக இருக்கும். அதற்கு ஏதுவாக தற்போது 8 சதவீத வட்டி விகிதத்தில் ஆர்பிஐ ப்லோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை வழங்குகிறது. ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு தற்போது 8.05% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எப்படி ப்லோட்டிங் ரேட் சேவிங்ஸ் பத்திரத்தை வாங்குவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் என்றால் என்ன?: ப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்டில் முதலீடு செய்வதற்கு முன், அதன் அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் இந்தப் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பத்திரங்களின் வட்டி விகிதம் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். RBI ஃப்ளோட்டிங் ரேட் பத்திரங்களின் வட்டி விகிதம் NSC வழங்கும் வட்டியை விட 0.35% அதிகம். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து, இந்தப் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் மாறுபடும்.

 ஆர்பிஐ வழங்கும் அசத்தலான திட்டம்! 8.05% வட்டி விகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட் பாத்திரம்! பெத்த லாபம்!


முதிர்வுக் காலம்: ஆர்பிஐ வழங்கும் இந்தப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் 7 ஆண்டுகள் ஆகும். வழக்கமான முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுவதற்கான ஆப்ஷன் இல்லை. ஆனால் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட லாக்-கின் காலத்திற்குப் பிறகு பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறலாம். இதற்கான வட்டி அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். வழங்கப்படும் வட்டி வரிக்கு உட்பட்டது.

ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் பத்திரங்களை வாங்குவது எப்படி?: ஆர்பிஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பத்திரங்களை வாங்குவதற்கான சில வழிகள்.

1. வங்கி ஆப்/இணையதளம் மூலம் வாங்கலாம்
2. ஆர்பிஐ இணையதளம் அல்லது ஆப் மூலம் வாங்கலாம்
3. வங்கிக் கிளை வழியாக வாங்கலாம்

ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் சேமிப்புப் பத்திரங்களை எப்படி வாங்குவது?: RBI மூலம் RBI ஃப்ளோட்டிங் ரேட் சேமிப்புப் பத்திரங்களை வாங்க, உங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி RBI-யின் RDG கணக்கை உருவாக்க வேண்டும். இது முடிந்ததும், முதலீடு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்-களைப் பின்பற்ற வேண்டும்.

ஸ்டெப் 1: உங்கள் RBI சில்லறை நேரடி கணக்கில் (rbiretaildirect.in) உள்நுழைந்து, பின்னர் "FRSB" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் சேமிப்புப் பத்திரங்களுக்கு ஏதேனும் ஏலம் நடந்தால், அது டாஷ்போர்டில் காண்பிக்கப்படும். "Bid" என்பதைக் கிளிக் செய்து, "Bid Entry"என்பதற்குச் செல்லவும்.

ஸ்டெப் 3: "Bid Entry" என்ற பெட்டியில் நீங்கள் ஏலத்தொகையை என்டர் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஏலத் தொகை 1,000 ரூபாய். ஏலத்தொகையை நீங்கள் என்டர் செய்தவுடன், மீதமுள்ள விவரங்கள் தானாக நிரப்பப்படும், அதன்பின் "Submit" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் "Submit" என்பதைக் கிளிக் செய்தவுடன் UPI உட்பட பல்வேறு கட்டண விருப்பங்களைக் கொண்ட புதிய பக்கம் திறக்கும். பணம் செலுத்தியதும், மெயில் மற்றும் SMS அனுப்பப்படும். ஏலக் காலம் முடிந்ததும் உங்கள் ஆர்பிஐ சில்லறை நேரடிக் கணக்கில் பத்திரங்கள் ஒதுக்கப்படும்.

ஃப்ளோட்டிங் ரேட் சேமிப்புப் பத்திரங்களை ஆஃப்லைனில் வாங்குவது எப்படி?: ஃப்ளோட்டிங் ரேட் சேமிப்புப் பத்திரங்களை வாங்குவதற்கான வழிமுறைகளை உங்கள் வங்கிக் கிளையில் நேரடியாக சென்று விசாரிக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்க பணத்தை பயன்படுத்தி இந்த பத்திரங்களை வாங்க இயலாது.

ரொக்க பணம் மூலம் முதலீடு செய்யும்போது அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே செலுத்த முடியும். இதைத் தாண்டி முதலீடு செய்ய வேண்டுமெனில் காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் (DD) மூலம் செலுத்த வேண்டும். காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செலுத்தப்படும் தொகை, அவை பணமாக்கப்படும் நாளே முதலீடு செய்யப்பட்ட நாளாகக் கருதப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+