இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் அவர்களிடம் பாஸ்போர்ட் இருந்தாக வேண்டும். இதற்கு முன்பெல்லாம் பாஸ்போர்ட் பெறுவது என்பது மிகப்பெரிய வேலை. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் நாம் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்துவிட முடிகிறது. ஆவணங்களை கூட ஆன்லைனிலேயே தாக்கல் செய்யவும் முடிகிறது.
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து, பாஸ்போர்ட் சேவை அலுவலகத்திற்கு சென்று ஆவணங்கள் சரிபார்ப்பும் முடிந்துவிட்டது., என்னுடைய விண்ணப்பத்தின் நிலையை நான் அறிய வேண்டும் என்பவர்கள் இதற்காக பாஸ்போர்ட் விண்ணப்ப அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. போனிலேயே உங்கள் பாஸ்போர்ட்டின் நிலையை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலையை அறிய என்ன செய்யலாம் என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். முதலில் https://www.passportindia.gov.in/psp/trackApplicationService என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் என்ன வகையான விண்ணப்பம், பிறந்த தேதி மற்றும் பைல் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். நீங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்த போதே உங்களின் பைல் எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை கொடுத்து சப்மிட் தர வேண்டும்.

இதன் பின்னர் உங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும். போலீஸ் சரிபார்ப்பு நிலை, பாஸ்போர்ட் அச்சிடும் நிலை, தபால் நிலையத்தில் இருந்து உங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது என பல்வேறு நிலைகள் இதில் காட்டப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அல்லது சில குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் கூட அந்த தகவலும் இதில் காண்பிக்கப்படும். எனவே உடனடியாக நீங்கள் அந்த குறிப்பிட்ட ஆவணங்களை தாக்கல் செய்து பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும்.
அடுத்ததாக உங்களுடைய போனில் எம்பாஸ்போர்ட் சேவா மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கூட உங்களுடைய பாஸ்போர்ட்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகள் என இரண்டிலுமே இதனை பயன்படுத்த முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களுடைய application reference number மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் போதும் உங்களுடைய பாஸ்போர்ட் நிலை தெரிந்து விடும்.
பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது தெரிந்து கொள்வது நல்லது. பெரும்பாலும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். இருந்தாலும் சில சமயங்களில் அந்த மெசேஜை நீங்கள் கவனிக்காமல் தவறவிட்டிருக்கலாம்.
கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுகின்றன அல்லது மேலும் சில சரிபார்ப்புகள் தேவைப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்கள் வந்து அதை நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் உங்களுக்கான பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவே அவ்வப்போது பாஸ்போர்ட்டின் நிலையை நீங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் உங்களுடைய பாஸ்போர்ட் வந்து சேர்வதை உறுதிப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications