வருமான வரியைக் குறைக்க நிதியாண்டின் துவக்கத்திலேயே முறையாகத் திட்டமிட வேண்டும் இல்லையெனில் வருடத்தில் இறுதியில் நீங்கள் சம்பாதித்த பெரும் பகுதி தொகை அரசுக்கு வருமான வரியாகச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
வருடாந்திர நிதி திட்டமிடலில் வரிச் சேமிப்பு முதலீடுகள் மிகவும் முக்கியமானது, இதை உணர்ந்து பலர் சரியாகத் திட்டமிட்டு 80சி பிரிவில் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய்க்காகச் சலுகையை முழுமையாகப் பெறுகின்றனர்.
ஆனால் சிலர் வருமான வரிச் சலுகை கிடைக்கும் முதலீட்டைச் சரியான முறையில் திட்டமிடாமல் வருடத்தின் இறுதியில் தவித்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகவே கடைசி நேரத்தில் முதலீடு செய்து வருமான வரிச் சலுகை பெற வாய்ப்பு இருக்கும் சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களைப் பற்றித் தான் நாம இப்போது பார்க்கப்போகிறோம்.
பிபிஎப் திட்டம்
Public Provident Fund எனப்படும் பிபிஎம் திட்டம் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாக இருந்தாலும், நீண்ட கால முதலீடாக விளங்குகிறது. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் திட்டம் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சம் மிகவும் குறைவு. மேலும் இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போது 7.1 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி வருமானத்தைத் திருப்பி அளிப்பது கூடுதல் சிறப்பு.
வருமான வரிச் சலுகை
இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு, முதலீடு செய்த தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விலக்கு உண்டு, 15 ஆண்டுக் கால முடிவில் கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு இருக்கும் காரணத்தால் வருமான வரிப் பிடியில் சிக்கியுள்ளோர் கடைசி நேரத்தில் வரியைச் சேமிக்க இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
பிரச்சனையைத் தீர்க்க வழி
பிபிஎப் திட்டத்தை ஒரு வருடத்தில் 80சி பிரிவில் கிடைக்கும் வருமான வரிச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மட்டுமே பயன்படுத்துங்கள். இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையான 500 ரூபாயில் இருந்து அதிகப்படியாக 1.50 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
என்எஸ்சி திட்டம்
தேசிய சேமிப்புத் திட்டம் அல்லது நேஷனல் சர்டிபிகேட் திட்டத்தைத் தான் நாம் NSC திட்டம் என அழைக்கிறோம். 5 வருடம் லாக்-இன் காலம் கொண்ட இந்தத் திட்டத்திற்கு அரசு 6.8 சதவீதம் அளவிலான வட்டி வருமானத்தைத் தற்போது அளிக்கும் காரணத்தால் 80சி பிரிவில் இருக்கும் இடைவேளையை எளிதாகத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் அதிக லாபத்தையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications