EPFO: பிஎஃப் கணக்கிற்கு எதிராக லோன் பெறுவது எப்படி? எந்தெந்த சூழ்நிலைகளில் PF பணத்தை எடுக்கலாம்?

சம்பளம் பெறும் பெரும்பாலானோர் PF கணக்கு வைத்திருப்பார்கள். நிதி உதவி தேவைப்படும் நேரங்களில் உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். சில அவசர கால தேவைகளுக்கு பிஎஃப் பணம் உங்களுக்கு கைகொடுக்கும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுப்பதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.

பலர் கடன்களுக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை மட்டுமே அதிகம் நம்பி இருப்பார்கள். ஆனால் EPFO அமைப்பு சில நிபந்தனைகளின் கீழ் பகுதியளவு பணத்தை திரும்ப எடுக்க அனுமதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே அவசரக்கால நிதி தேவை இருந்தால் உங்கள் PF பணத்தை பயன்படுத்தலாம்.

EPFO: பிஎஃப் கணக்கிற்கு எதிராக லோன் பெறுவது எப்படி? எந்தெந்த சூழ்நிலைகளில் PF  பணத்தை எடுக்கலாம்?

PF கணக்கிலிருந்து பகுதியளவு திரும்பப் பெற தேவைப்படும் தகுதி: உங்களிடம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) இருக்க வேண்டும். நீங்கள் EPFO உறுப்பினராக இருக்க வேண்டும். EPFO விதிகளின்படி திரும்பப் பெறும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் திரும்பப் பெறும் தொகை இருக்க வேண்டும்.

PF கணக்கிலிருந்து எப்போது பணத்தை எடுக்க முடியும்?: குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டுமே பிஎப் பணத்தை எடுக்க முடியும்.

மருத்துவ உதவி: உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அப்போது 50 சதவீதம் வரை PF பணத்தை எடுக்கலாம்.

வீடு வாங்குவது அல்லது கட்டுவது: வீடு வாங்க அல்லது வீடு கட்ட அதிகம் செலவாகும் என்பதை புரிந்து உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை EPFO அமைப்பு வழங்கியுள்ளது.

திருமண செலவுகள்: தங்களுடைய திருமணம் அல்லது உடன் பிறந்தவர்கள், குழந்தைகளின் திருமணத்தின் பொது ஏற்படும் செலவுகளை சமாளிக்க PF பணத்தை எடுக்கலாம் அல்லது உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நிதியளிக்கவும் பணம் எடுக்கலாம்.

வேலையின்மை: 3 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால் உங்கள் PF பணத்தில் 75 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.

நிரந்தரமாக உடல் ஊனமுற்றாலோ, பிழைக்க முடியாத நோய் ஏதேனும் ஏற்பட்டாலோ ஓய்வு பெறுவதற்கு முன்பே முழு பிஎப் தொகையும் எடுக்க முடியும். அப்படி இல்லை என்றால் பகுதியளவு மட்டுமே திரும்பப் பெற முடியும்.

UMANG அப்ளிகேஷன் மூலம் PF பணத்தை எப்படி பெறுவது?:

ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2: உங்கள் விவரங்களுடன் உள்நுழைந்து, "services" பிரிவில் ஈபிஎஃப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: "Employee Centric Services" என்ற பிரிவுக்குச் சென்று, "Raise Claim" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: அதன் பின் உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்த பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை வழங்கவும்.

ஸ்டெப் 6: செயல்முறை முடிந்ததும், உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும்.

ஸ்டெப் 7: இந்த ரெஃபரன்ஸ் நம்பரைப் பயன்படுத்தி, உங்கள் கோரிக்கையின் நிலையை அப்ளிகேஷனில் கண்காணிக்கலாம்.

UMANG அப்ளிகேஷன் மூலம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்கள் ஈபிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+