சென்னை: ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு, இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களாக இருக்கின்றன. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நியாய விலை கடைகளில் கிடைக்கும் பொருட்களான அரிசி, சர்க்கரை போன்றவற்றை மானிய விலையில் பெற முடியும். ஆனால் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளைப் போலியாகப் பெற்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனைச் சரி செய்யும் விதமாக அரசு ஆதார் அட்டை உடன் ரேஷன் கார்டுகளை இணைக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஆதார் கார்டையும், ரேஷன் கார்டையும் இணைக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் எச்சரிக்கின்றன. ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் பல ரேஷன் கார்டுகளை மோசடியாக பெரும் நபர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காக தான் இத்தகைய நடவடிக்கையை அரசு ஏற்படுத்தியுள்ளது. சரி, ஆதார் கார்டை, ரேஷன் கார்டுடன் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஆன்லைனில் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?:
ஸ்டெப் 1: உங்கள் மாநிலத்தின் பிரத்யேக PDS போரட்டலைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: 'Link Aadhaar with Ration Card' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்களுடைய ரேஷன் கார்டு நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன் பின், உங்களுடைய ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 6: தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து, 'Continue' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: அதன் பிறகு உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 8: OTP-ஐ என்டர் செய்து, உங்கள் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்களை முடித்த பின்பு, உங்களுக்கு ஒரு SMS அனுப்பப்படும்.
ஆஃப்லைனில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?:
ஸ்டெப் 1: உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட உள்ளூர் ரேஷன் கடைக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் உங்கள் ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் கார்டை வங்கிக் கணக்குடன் இணைக்கவில்லை என்றால், வங்கி அறிக்கையின் ஜெராக்ஸ் தேவைப்படலாம்.
ஸ்டெப் 4: குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்துச் செல்லவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் ரேஷன் கடையில் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 5: அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தப் பிறகு, அதிகாரிகள் அவற்றை சரிபார்த்துவிட்டு, உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பார்கள். அதன் பிறகு, SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications