ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க ஃபார்ம் 10D-ஐ பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஈபிஎஃப் அமைப்பு இந்த ஃபாரத்தை வழங்குகிறது. உறுப்பினர், மனைவி, கணவர் பரிந்துரைக்கப்பட்ட நாமினி போன்ற விண்ணப்பதாரர் இந்த ஃபாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த கட்டுரையில் ஃபார்ம் 10D-யைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை பற்றிய விரிவான தகவல்கள் குறித்து பார்ப்போம்.
ஈபிஎஃப் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்திர ஓய்வூதியம் பெற ஃபார்ம் 10D என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதில் தாமதங்கள் ஏற்படாமல் இருக்க, தேவையான அனைத்து ஆவணங்களையும் துல்லியமாக சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

ஃபார்ம் 10D-ஐ ஆன்லைனில் பயன்படுத்த, இ-நாமினேஷன் செய்திருப்பதையும், KYC செயல்முறை முடிக்கப்பட்டிருப்பதையும், சரியான தகவல்களைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
அதன் பின் நீங்கள் கிளைம் செய்ய இருக்கும் ஓய்வூதிய வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவதில் என்ன வகை இருக்கிறது? என்று உங்களுக்குத் தோன்றலாம். இது வயது மற்றும் பதவியில் இருப்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். பின்வரும் எந்த பென்ஷன் திட்டத்தை வேண்டுமானாலும் நீங்கள் கோர முடியும்.
ஊனமுற்றோர் ஓய்வூதியம்: முழுமையான மற்றும் நிரந்தர ஊனம் காரணமாக பணியை விட்டு வெளியேறும் உறுப்பினருக்கு ஏற்றது.
குறைக்கப்பட்ட ஓய்வூதியம்: உறுப்பினர் 50 வயதிற்கு மேல் ஆனால் 58 வயதுக்கு குறைவாக இருந்து பணியை விட்டு வெளியேறிய பிறகு பெரும் ஓய்வூதியம்.
கணவனை இழந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம்: EPF உறுப்பினர் இறந்தவுடன் அவரின் குடும்பம் பெரும் ஓய்வூதியம். உதாரணமாக EPF உறுப்பினரின் மனைவி மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாலாம்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஓய்வூதியம்: EPF உறுப்பினர் அல்லது அவருடைய மனைவி இறந்த பிறகு அல்லது மறுமணம் செய்து கொண்ட அவர்களுடைய மகன் அல்லது மகள் பெறும் ஓய்வூதியம்.
EPF ஓய்வூதியத்தை யார் கோரலாம்?: விண்ணப்பதாரர் இந்தத் துறையில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
உறுப்பினர்
கணவரை இழந்தவர்
மேஜர்/பெற்றோரை இழந்த குழந்தைகள்
பாதுகாவலர்
நாமினி
படிவம் 10D உடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல்: அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ், ஆதார், மனைவியின் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை வங்கி கணக்குப் புத்தகத்துடன் சமர்பிக்க வேண்டும்.
EPF: ஆன்லைனில் 10D படிவத்துடன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அதன் பின் "Services" என்பதன் கீழ், "Employees" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: கீழே ஸ்க்ரோல் செய்து "Online service" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: UAN மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை என்டர் செய்து உறுப்பினர் இ-சேவா போர்ட்டலில் உள்நுழையவும்.
ஸ்டெப் 5: "Online service" என்பதைக் கிளிக் செய்து, கொடுக்கப்பட்டிருக்கும் விருப்பங்களிலிருந்து படிவம் 10D-ஐக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 7: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கான பெட்டியைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 8: ஆன்லைன் கிளைம் செயல்முறைக்குச் செல்லவும்.
ஸ்டெப் 9: குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 10: உங்கள் பெயர் அச்சிடப்பட்ட பாஸ்புக்கை பதிவேற்ற "Choose file" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 11: பதிவேற்றிய விவரங்களைச் சரிபார்த்து, "Get OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 12: OTP-ஐ என்டர் செய்து படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications