மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி?!

இந்திய வேலைவாய்ப்பு சந்தை கடந்த ஒரு வருடத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு, தற்போது நிலையான வளர்ச்சியை அடைந்து வருவதுமட்டும் அல்லாமல் நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது.

குறிப்பாக 2020ல் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த பல நிறுவனங்கள் தற்போது மீண்டும் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் துவங்கியுள்ளது. இதனால் இந்திய வேலைவாய்ப்பு சந்தை நீண்ட காலத்திற்குப் பின் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

ஈபிஎப் கணக்கு

ஈபிஎப் கணக்கு

மாத சம்பளக்காரர்களின் சம்பளத்தில் பெருமளவிலான தொகை ஒவ்வொரு மாதமும் EPF-க்குச் செல்லும் நிலையில், மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஈபிஎப் கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வருமானத்தை அளிக்கும்.

வட்டி விகிதம் அறிவிப்பு

வட்டி விகிதம் அறிவிப்பு

அந்த வகையில் 2018-19ஆம் நிதியாண்டில் 8.65 சதவீதம் அளவிலான வட்டி வருமானத்தை அளித்த மத்திய அரசு, 2019-20ஆம் நிதியாண்டில் 8.5 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை அளித்த. இந்நிலையில் கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு அடைந்த 2020-21 நிதியாண்டுக்கான காலகட்டத்திற்கு 8.50 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க ஈபிஎப்ஓ அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

அரசு அறிவிப்பு

அரசு அறிவிப்பு

இந்நிலையில் ஈபிஎப்ஓ பரிந்துரையை ஏற்ற தொழிலாளர் அமைச்சகம் 2020-21 நிதியாண்டுக்கான வட்டி விகித அளவீட்டை அதிகாரப்பூர்வமாக அரசு gazette-ல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

5 கோடி ஊழியர்களுக்கு லாபம்

5 கோடி ஊழியர்களுக்கு லாபம்

இந்த அறிவிப்பு மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள 5 கோடி பேர் 2020-21 நிதியாண்டுக்கு தங்களது கணக்கில் வைத்துள்ள தொகைக்கு 8.5 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை மத்திய அரசு பிஎப் கணக்குகளில் டெப்பாசிட் செய்யும்.

இந்நிலையில் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது..?!

பிஎப் வட்டி தொகை கணக்கீடு

பிஎப் வட்டி தொகை கணக்கீடு

பொதுவாக மத்திய அரசு பிஎப் வட்டி விகிதத்தை அறிவித்த உடன், EPFO அமைப்பு நடப்பு நிதியாண்டு முடியும் வரையில் காத்திருக்கும். நிதியாண்டு முடிந்த பின்பு ஒவ்வொரு கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை மாத வாரியாகக் கணக்கிட்டு மொத்த ஆண்டுக்கான வட்டியைத் தொகை டெப்பாசிட் செய்யும்.

கணக்கீடு உதாரணம்

கணக்கீடு உதாரணம்

இதன் படி 2020-21நிதியாண்டுக்கான வட்டி அளவை ஈபிஎப்ஓ அமைப்பு மாத வாரியான ரன்னிங் பேலென்ஸ் தொகையை X 8.5/1200 படி கணக்கிட்டு வட்டி தொகையை டெப்பாசிட் செய்யும்.

உதாரணமாக உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருந்தால் 2020-21 நிதியாண்டுக்கு மத்திய அரசு உங்களுக்கு 708.3 ரூபாயை வட்டியாக டெப்பாசிட் செய்யும்.

பிஎப் பணம் வித்டிரா

பிஎப் பணம் வித்டிரா

இதேவேளையில் ஒருவர் தனது பிஎப் கணக்கில் இருந்து பணத்தை (final settlement) வித்டிரா செய்துவிட்டால், முந்தைய ஆண்டுக்கான வட்டி அளவில் கணக்கிடப்பட்டு டெப்பாசிட் செய்யப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பென்ஷன் தொகைக்கு வட்டி இல்லை

பென்ஷன் தொகைக்கு வட்டி இல்லை

இதேபோல் பிஎப் கணக்கில் பென்ஷன் பிரிவுக்குச் செல்லும் பணத்திற்கு இந்த வட்டி வருமானம் பொருந்தாது. இதனால் final settlement வித்டிரா செய்தவர்களுக்குப் பென்ஷன் தொகை மட்டுமே இருக்கும் போது எவ்விதமான வட்டி வருமானமும் கிடைக்காது.

ஊழியர்கள் தரப்பில் இருந்து செல்லும் 12 சதவீத தொகையில் 8.33 சதவீதம் தொகை பென்ஷன் பிரிவுக்குச் செல்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+