EPFO: உங்கள் PF அக்கவுண்டுக்கு நாமினியை சேர்த்து விட்டீர்களா? மொபைலில் சில நிமிடங்களில் செய்யலாம்!

EPFO அமைப்பின் கீழ் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் மாதாந்திர பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடுத்தர குடும்பங்களில் பணிபுரியும் பலருக்கு PF மட்டும் தான் ஒரே சேமிப்பு. EPF கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் கண்டிப்பாக ஒரு நாமினியை நியமிக்க வேண்டும். ஏனெனில் இறப்பு என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி துரதிஷ்டவசமாக இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவருடைய PF தொகை எந்தப் பிரச்சினையும் இன்றி அவருடைய குடும்பத்தினருக்கு சேர வேண்டும்.

அதற்காக இபிஎஃப் திட்டம் 1952-இன் கீழ் அனைத்து PF உறுப்பினர்களும் ஒரு நாமினியை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டது. உங்கள் அக்கவுண்டில் நாமினியை சேர்ப்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. ஒரு எளிய செயல்முறை தான். இதை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே செய்து முடிக்க முடியும். ஏற்கனவே நீங்கள் நாமினியை சேர்த்திருக்கிறீர்களா? என்பதையும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

சில இபிஎஃப் உறுப்பினர்கள் ஏற்கனவே நாமினியை சேர்த்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். குழப்பத்தை தவிர்ப்பதற்கு ஒருமுறை இதை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

EPFO: உங்கள் PF அக்கவுண்டுக்கு நாமினியை சேர்த்து விட்டீர்களா? மொபைலில் சில நிமிடங்களில் செய்யலாம்!

உங்களில் EPF அக்கவுண்டுக்கு நாமினி இருக்கிறாரா என்பதை சரி பார்ப்பது எப்படி?: நீங்கள் ஏற்கனவே நாமினியை சேர்த்திருந்தால் வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெப் 1: முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இபிஎஃப்ஓ போர்டலுக்குச் செல்ல வேண்டும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் விபரங்களை வழங்கி உள்நுழைய வேண்டும். இதில் கேப்ட்சா கோடு கேட்கப்படும். அந்த கோடை வழங்கவும்.

ஸ்டெப் 2: நீங்கள் காணும் திரையின் மேல் புறம் "மேனேஜ்" என்ற டேப் இருக்கும். அதை கிளிக் செய்தால் ட்ராப் டவுன் மெனுவில் இ-நாமினேஷன் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே நாமினியை சேர்த்திருந்தால் அந்த விபரங்கள் திரையில் காண்பிக்கும். இல்லையென்றாலும் நீங்கள் "வியூ" அல்லது "நாமினேஷன் ஹிஸ்டரி" என்ற பகுதிக்குச் சென்று ஏற்கனவே நாமினியை சேர்த்திருக்கிறீர்களா? என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கணக்கில் "நாமினேஷன் சக்ஸஸ்புள்" என்று காண்பித்தால் நீங்கள் வெற்றிகரமாக நாமினியை சேர்த்து விட்டீர்கள். அவருடைய விவரங்கள் இபிஎஃப்ஓ சிஸ்டமில் பதிவாகிவிட்டது என்று அர்த்தம். அப்படி காண்பிக்கவில்லை என்றால் நாமினி விவரங்கள் இன்னும் பெண்டிங்கில் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிஎஃப் அக்கவுண்டில் நாமினியை சேர்ப்பது எப்படி?:

ஸ்டெப் 1: முதலில் இபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய விவரங்களை வழங்கி உள்நுழைய வேண்டும்.

ஸ்டெப் 2: பிறகு மேனேஜ் என்ற டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும். அங்குள்ள ட்ராப் டவுன் மெனுவில் "இ-நாமினேஷன்" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் ப்ரொபைல் காண்பிக்கப்படும்.

ஸ்டெப் 3: முகவரி, புகைப்படம் போன்றவற்றை அப்டேட் செய்யாமல் வைத்திருக்கிறீர்களானால் முதலில் அதை அப்டேட் செய்யும்படி சிஸ்டம் கேட்கும். இதை முடித்து விடுங்கள்.

ஸ்டெப் 4: அடுத்த பக்கத்தில் "Having Family" என்று கேட்கப்படும். அதாவது குடும்பம் இருக்கிறதா என்று கேட்கப்படும். உங்களுக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் அல்லது உங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர் இருந்தால் "எஸ்" என்று கொடுக்கவும். திருமணமாகாதவர்கள் அல்லது குடும்பம் இல்லாதவர்கள் "நோ" என்று கொடுக்கலாம்.

ஸ்டெப் 5: நீங்கள் நாமினியாக நியமிக்கும் உறுப்பினரின் ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, அவர் உங்களுக்கு என்ன உறவு முறை, அவருடைய முகவரி உள்ளிட்ட தேவையான விவரங்களை வழங்க வேண்டும். நாமினியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். இந்த புகைப்படத்தின் அளவு 100 KB-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 6: நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை நியமிக்க விரும்பினால் "ஆட் ரோ" அல்லது "ஆட் ஃபேமிலி டீடைல்ஸ்" என்பதை தேர்வு செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+