இந்தியாவில் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசு பணிகள், இபிஎஃப் கணக்கின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் என இவர்கள் அனைவருமே ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம்.
Jeevan sammaan அல்லது life certificate என இவை அழைக்கப்படுகின்றன. அதாவது அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ் தான் இது. இந்த வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் அவர்களுக்கான ஓய்வூதியமும் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட பலன்களும் தொடர்ச்சியாக கிடைக்கும். வாழ்நாள் சான்றிதழை தாக்கல் செய்வதற்கு வயதானவர்கள் பல இடங்களில் அலைய வேண்டிய சூழல் இருக்கிறது.

இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட இபிஎஃப்ஓ அமைப்பு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஜனவரி ஒன்பதாம் தேதியிட்டு வெளியிட்டு இருக்கும் ஒரு சுற்றறிக்கையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, வங்கிச் சேவை பெறுவது அல்லது இபிஎஃப் அலுவலகங்களுக்கு செல்வது போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு உதவி செய்வதற்காகவே இபிஎஎப்ஓ அமைப்பு இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனப்படும் தபால் நிலைய வங்கியோடு கைகோர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இனி ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் மற்றும் இபிஎஃப் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை என தெரிவித்து இருக்கிறது. யாரெல்லாம் இன்னும் வாழ்நாள் சான்றிதழை தாக்கல் செய்யாமல் நிலுவையில் வைத்திருக்கிறார்களோ அவர்களின் வீடுகளுக்கு போஸ்ட்மேன்களும் தபால் நிலைய வங்கி சார்ந்த ஊழியர்களும் வந்து ஆன்லைன் வாயிலாக இந்த வாழ்நாள் சான்றிதழை வழங்குவார்கள், இதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டிய தேவையில்லை.

இபிஎஃப்ஓ இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் முறையில் ஆன்லைன் வாயிலாகவே வாழ்நாள் சான்றிதழ் பெற்று ஆதார் சரிபார்ப்பு முடித்து அவர்களே அதனை சமர்ப்பிக்கவும் செய்வார்கள். ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை தாக்கல் செய்த தேதியில் இருந்து அடுத்த ஆண்டு அதே தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். அதன்பிறகு அது செயலிழந்ததாக கருதப்படும்.
எனவே ஆண்டுக்கு ஒரு முறை புதிய வாழ்நாள் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். இப்போது இதனை ஆன்லைனிலேயே செய்யும் வசதி வந்துவிட்டது. இதற்கு முன்பு வரை வாழ்நாள் சான்றிதழை பென்ஷன் பெறக்கூடிய வங்கி மற்றும் இந்தியா தபால் நிலையங்கள், உமாங் செயலி மற்றும் இபிஎப் அலுவலகங்களுக்கு சென்று தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிரமங்களை குறைப்பதற்காக தான் தற்போது டிஜிட்டல் முறையில் இதனை தாக்கல் செய்யலாம் என்ற வசதியை கொண்டு வந்திருக்கிறது.
எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு வீட்டிலேயே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் தேவை என கோரிக்கை முன்வைக்க வேண்டும். இதனை அடுத்து தபால் நிலையத்திலிருந்து அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு வருகை தருவார்கள். அவர்கள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து , நீங்கள் பிறந்த தேதி நீங்கள் பென்ஷன் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளிட்டவற்றை எல்லாம் ஆய்வு செய்து ஆதார் தகவல்களையும் உள்ளிட்டு உங்களுடைய முக அடையாளம் அங்கீகாரம் பார்த்து டிஜிட்டல் முறையில் சான்றிதழை சமர்ப்பிப்பார்கள்.
இந்த இலவச சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் 033-22029000 என்ற தபால் நிலைய வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு வீட்டிலேயே வாழ்நாள் சான்றிதழ் சேவை பெற வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications