டெல்லி: இந்தியாவில் சம்பளத்திற்காக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . ஈபிஎப்ஓ அமைப்பு தான் இதனை மேலாண்மை செய்து வருகிறது.
பிஎப் பணம்: தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்களுக்கு பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாதந்தோறும் அவர்களின் கணக்கில் குறிப்பிட்ட தொகையானது வரவு வைக்கப்படுகிறது. இந்த பிஎஃப் பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. அவர்கள் ஓய்வு பெறும்போது இந்த தொகை ஒரு பெரிய தொகையாக அவர்களின் கைக்கு கிடைக்கும். அடிக்கடி நிறுவனம் மாறுபவர்களுக்கு பிரச்சினை இருக்க கூடாது என்பதற்காகவே UAN எனப்படும் யுனிவர்செல் அக்கவுண்ட் நம்பர் என்ற ஒரே கணக்கு எண் நம்பர் என பொதுவான ஒரு கணக்கு எண் வழங்கப்பட்டு இருக்கிறது.

யுஏஎன் நம்பர் உருவாக்கத்தில் புது நடைமுறை: ஈபிஎப்ஓவில் பணம் எடுக்கப்படுவது உள்ளிட்டவற்றில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல்வேறு அப்டேட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் தொடர்பான ஒரு புதிய விதி ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது அரசு. இதன்படி ஆகஸ்ட்1ஆம் தேதியிலிருந்து புதிதாக யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஒதுக்கீடு மற்றும் உருவாக்கம் என்பது Umang செயலி வாயிலாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்ப மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
முக அடையாள சரிபார்ப்பு அவசியம்: இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், புதிதாக யுஏஎன் நம்பர் ஒதுக்கீடு மற்றும் ஆக்டிவேட் செய்வது , ஏற்கனவே இருக்கும் யுஏஎன் எண்களை செயல்படுத்துவது, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் யுஏஎன் எண்களுக்கு முக அடையாள சரிபார்ப்பு மேற்கொள்வது என மூன்று செயல்களுக்கு Umang செயலி வாயிலாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார நடைமுறையை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனிலேயே மேற்கொள்ளலாம்: பிஎப் சந்தாதாரர்கள் , தாங்கள் வேலை நிறுவனத்தின் உதவியே இல்லாமல் இதனை தங்களுடைய போன் வாயிலாகவே மேற்கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
எப்படி யுஏஎன் நம்பர் உருவாக்குவது: முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Umang செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் "UAN allotment and activation என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் ஆதார் எண், மொபைல் எண் கொடுத்து, ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்கான செக்பாக்ஸை டிக் செய்ய வேண்டும். பின்னர் 'send OTP' என்பதை கிளிக் செய்தால் ஓடிபி வரும்.
முக அடையாள சரிபார்ப்பு எப்படி செய்வது: இதன் பின்னர் உங்கள் போனில் Aadhaar Face RD App செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் Proceed to Face Authentication என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் கேமரா ஆன் செய்யப்பட்டு முகம் ஸ்கேன் செய்து ஆதார் விவரங்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்படும். இதன் பின்னர் உங்களுக்கான யுஏஎன் நம்பர் புதிதாக உருவாக்கப்படும், இது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்கான யுஏஎன் நம்பர் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு விட்டது. உடனே உமாங் செயலியில் நீங்கள் பிஎப் கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை பெற்று கொள்ள முடியும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications