பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கக்கூடிய நபர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது ஈபிஎஃப்ஓ அமைப்பு. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக பெரும்பாலானவர்கள் அவற்றை பயன்படுத்தாமல் விட்டு விடுகிறோம். ஈபிஎஃப்ஓ வழங்கக்கூடிய பலருக்கும் தெரியாத ஒரு முக்கியமான பலன் குறித்து தற்போது நாம் விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் ஒரு எல்ஐசி பாலிசிதாரர் , உங்களிடம் எல்ஐசி பிரீமியம் செலுத்த பணம் இல்லை என்றால் இந்த ஒரு விஷயத்தை செய்து முடித்தால் பிஎஃப் அமைப்பே அந்த பிரீமியம் தொகையை செலுத்தி விடும். அப்படி ஒரு பிரத்தியேக சலுகை எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஈபிஎஃப்ஓ அமைப்பால் வழங்கப்படுகிறது. பின் வரக்கூடிய வகையில் உங்களுடைய பிஎஃப் கணக்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் உங்கள் pf கணக்கில் இருந்து எல்ஐசி பிரிமியத்திற்கான பணம் சென்றுவிடும்.

நீங்கள் புதிதாக lic பாலிசி வாங்கினாலும் சரி அல்லது பிரீமியம் செலுத்த வேண்டும் என்றாலும் சரி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு அதனை செலுத்திக் கொள்ளலாம். யாரெல்லாம் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்ன தகுதிகள்: உங்களிடம் ஆக்டிவான பிஎஃப் கணக்கு இருக்க வேண்டும், உங்களுடைய கடைசி இரண்டு மாத சம்பளத்திற்கு நிகரான பணம் பிஎஃப் கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். எல்ஐசி பாலிசி உங்களுடைய பெயரில் இருக்க வேண்டும். எல்ஐசி ஆல் வழங்கப்பட்ட பாலிசிகளுக்கு மட்டுமே பிஎஃப் கணக்கில் இருந்து பிரீமியம் செலுத்த முடியும் வேறு எந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி பிரீமியத்தையும் இதிலிருந்து செலுத்த முடியாது.
எவ்வளவு பணம் கிடைக்கும்: எல்ஐசி பிரீமியத்திற்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த பணத்தை பிஎஃப் கணக்கிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி பிரிமியம் செலுத்துவதற்கு இதனை பயன்படுத்த முடியும். பிரீமியம் தொகைக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக எடுக்க முடியாது.
என்ன செய்ய வேண்டும்: ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். இதனை அடுத்து கேஒய்சி பிரிவுக்கு சென்று எல்ஐசி பாலிசி என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். எல்ஐசி பாலிசி நம்பர் மற்றும் தேவைப்படக்கூடிய விவரங்களை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து படிவம் 14 இல் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். உங்களுடைய பிஎஃப் கணக்கோடு எல்ஐசி பாலிசி இணைக்கப்பட்டுவிடும். இதனை அடுத்து எப்பொழுது எல்லாம் பிரீமியம் செலுத்தக்கூடிய தேதி வருகிறதோ அப்போது எல்லாம் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொள்ளப்படும்.
என்ன நன்மைகள்?: இதன் மூலம் பிரீமியம் தேதியை தவறவிடும் வாய்ப்பு குறைகிறது. உங்களுடைய எல்ஐசி பாலிசி தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். பிரீமியம் செலுத்துவதற்காக நீங்கள் வெளியில எங்கும் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. இதற்காக எந்த அலுவலகத்திற்கும் சென்று அலைய வேண்டிய அவசியமும் இல்லை , அனைத்துமே ஆன்லைனிலேயே முடிந்துவிடும் . ஆனால் இது ஆண்டுக்கான பிரீமியம் செலுத்த மட்டுமே பயன்படுத்த முடியும். காலாண்டு மற்றும் அரையாண்டு பிரீமியம் பேமெண்ட் முறைகளுக்கு பொருந்தாது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications