வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சம்பளத்தில் PF பிடித்தம் செய்யப்படுகிறது. PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் UAN நம்பர் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். EPFO அமைப்பு ஒவ்வொரு செயலில் உள்ள PF கணக்கிற்கும் ஒரு தனி யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை வழங்கியுள்ளது. இந்த 12 இலக்க நம்பர் தான் PF தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது.
உதாரணமாக உங்களுடைய EPF பேலன்ஸ்-ஐ சரி பார்ப்பது, உங்கள் பிஎஃப் கணக்கை அப்டேட் செய்வது என அனைத்திற்கும் இந்த UAN நம்பர் தேவைப்படும். சில நேரங்களில் மக்கள் தங்கள் UAN நம்பரை மறந்து விடுவார்கள். ஏனெனில் இது ஒரு நீண்ட எண்ணாக இருப்பதால்.. நினைவில் வைத்துக் கொள்வது சற்று சிரமம் தான்.

நீங்களும் இதே போன்ற பிரச்சனையில் இருந்தால்.. கவலைப்படவே தேவையில்லை! உங்கள் யுஏஎன் நம்பரை எளிதில் மீட்டெடுக்கலாம். உங்கள் பிஎப் கணக்கை திறந்து பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக யுஏஎன் நம்பர் முக்கியம். எப்படி 12 இலக்க ஆதார் நம்பர் உள்ளதோ அதேபோல 12 இலக்க யுஏஎன் நம்பர் இபிஎப் உறுப்பினர்களுக்கு இன்றியமையாத ஒன்று. யுஏஎன் நம்பரை மறந்து விடுபவர்கள்.. அதை மீட்டெடுக்க சில எளிய வழிகளை பயன்படுத்தலாம்.
UAN நம்பரை எப்படி கண்டுபிடிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: வலது பக்கத்தில் உள்ள "இம்போர்ட்டண்ட் லிங்க்" என்ற செக்ஷனை தேடி பாருங்கள். அங்கு "நோ யுவர் யுஏஎன்" என்று ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்கள் பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்ச்சா கோடை என்டர் செய்யுங்கள். அதன் பிறகு "ரெக்வஸ்ட் ஓடிபி" என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி "வேலிடேட் ஓடிபி" என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 5: அடுத்து உங்களுடைய முழு பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர், பான் நம்பர் போன்ற சில விவரங்களை நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 6: பின்னர் "ஷோ மை யூஏஎன்" என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்த உடன் உங்கள் யூஏஎன் நம்பர் திரையில் காண்பிக்கப்படும். நம்பரை கண்டுபிடித்து மறக்காமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கலாம். இதனால் மீண்டும் மீண்டும் இதே செயல் முறையை செய்து உங்கள் யுஏஎன் நம்பரை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல இதற்கு மற்றொரு வழியும் உண்டு.
SMS மூலம் யுஏஎன் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?: SMS மூலம் UAN நம்பரை பெற EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இது EPFO-ஆல் வழங்கப்பட்ட நம்பர். இதற்கு உங்களுக்கு பதில் அளிக்கப்படும். ஆனால் உங்கள் பிஎஃப் கணக்குடன் தொடர்புடைய நம்பரில் இருந்து தான் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications