வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கு கால அவகாசம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக மார்ச் 3 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 3 ஆக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த நவம்பர் 4ம் தேதி பிறப்பித்திருந்த உத்தரவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு, அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
கடைசி தேதி எப்போது?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து மே 3, 2023 க்குள் அதிக ஓய்வூதியத்திற்கு கூட்டாக விண்ணப்பிக்க முடியும். இதற்காக ஓய்வூதிய நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் ஓய்வூதியம் வரம்பு என்பது 15,000 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்களிப்பு?
தற்போது ஊழியர்களும் நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தில் 12% வருங்கால் வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்கின்றனர். இதில் நிறுவனத்தின் தரப்பில் இருந்து செய்யப்படும் முதலீடானது இரு பகுதியாக பிரிக்கப்படுகிறது. இதில் 8.33% என்பது EPS-க்கும், 3.67% என்பது EPF-க்கும் பங்களிப்பு செய்யப்படுகின்றது. இது தவிர ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அரசு தரப்பில் இருந்து 1.16% பங்களிப்பு செய்கின்றது.
எப்படி அதிக பென்சனுக்கு அப்ளை செய்வது?
படி 1: e- sewa போர்ட்டல் பக்கத்தில் உறுப்பினர்கள் நுழையவும்.
படி 2: " pension on higher salary" என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: ஜாய்ண்ட் ஆப்சன்ஸ் என்ற பார்மினை தேர்வு செய்யவும்
படி 4: இது புதிய பக்கத்தில் தொடங்கும். இதில் UAN, பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட வேண்டியிருக்கும்.
படி 5: இந்த பார்மினை பூர்த்தி செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
என்னென்ன தேவை??
இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் UAN-ல் இருப்பதை போல சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக பெயர், ஆதார் எண், பான் எண், பிறந்த தேதி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அதேபோல் கட்டாயம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 3 என்றாலும், இதுவரையில் 8000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
கூட்டு விண்ணப்பம்
ஆக தகுதியான விண்ணப்பதாரர்களும் அதிக பென்சன் தொகைக்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை மே 3, 2023 வரையில் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ், அதிக சம்பளம் பெறுவோருக்கான கூட்டு விருப்பப்படிவத்தை தொழிலாளர் காப்பீட்டு கழகம் இபிஎப்ஓ வடிவமைத்துள்ளது.
கூட்டுக் கோரிக்கை தேவை
அதிக ஊதியத்தில் பணியாளர் மற்றும் பணி வழங்குபவர் ஆகிய இருவரின் பங்களிப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால், இபிஎப் மற்றும் இபிஎஸ்-95 திட்டங்களுக்கு அவர்கள் அதிக சம்பளத்தில் பங்களிக்கும் போது கூட்டுக் கோரிக்கை தேவைப்படுகிறது. இது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களும், அதாவது 1995 இன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புக்கு அப்பாற்பட்ட உண்மையான சம்பளத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம். இபிஎஃப் திட்டத்தின் உறுப்பினராக, ஒரு ஊழியர் ஓய்வுபெறும் போது , 58 வயதை தொட்ட பிறகு ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையைப் பெற தகுதியுடையவர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications