ஊழியர்களுக்கு வயதான காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு திறம்பட நிர்வகித்து வருகிறது. EPFO அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு பயன்பெறும் வகையில் தொகையை திரும்பப் பெறுதல், முன்பணம் எடுத்தல் மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகள் என அனைத்தையும் ஆன்லைனில் விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளும் வகையில் இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தின் மூலமாகவே நீங்கள் உங்கள் PF கணக்கில் நாமினியை சேர்க்கவில்லை என்றாலும் எளிதில் சேர்த்துக் கொள்ளலாம்.
EPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்கு என முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஊதியத்தில் 12% ஈபிஎஃப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது.

நீங்கள் ஓய்வு பெறும்போது இந்த PF தொகையை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் EPF கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் துரதிஷ்டவசமாக காலமானால் அவருடைய அன்புக்குரியவர்கள் இந்த பிஎஃப் தொகையை பெற முடியும். நீங்கள் உங்கள் PF கணக்கில் இதுவரை நாமினியை சேர்க்கவில்லை என்றால் கீழ்காணும் விதிமுறைகளைப் பயன்படுத்தி நாமினியை சேர்க்கலாம்.
உங்கள் PF கணக்கில் நாமினியை சேர்ப்பது எப்படி?:
ஸ்டெப் 1: உங்கள் PF கணக்கில் நீங்கள் இன்னும் நாமினியை சேர்க்கவில்லை என்றால் EPFO அமைப்பின் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். இங்கு நீங்கள் பல்வேறு ஆப்ஷன்களைக் காணலாம்.
ஸ்டெப் 2: அடுத்ததாக, "Services" பிரிவில் கிளிக் செய்து, "For Employees" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் UAN நம்பர், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: உள்நுழைந்த பிறகு, "Manage" என்ற மெனுவிற்குச் சென்று "e-Nomination" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், "Provide Details" என்ற மெனுவின் கீழ், "Save" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் குடும்ப உறுப்பினரை சேர்க்க, "Yes" என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது உங்கள் குடும்ப விவரங்களைச் சேர்த்து ஒரு நாமினியைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெப் 4: தேவையான விவரங்களை வழங்கியவுடன், "Nomination Details" என்பதைக் கிளிக் செய்து, "Save EPF Nomination" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடுத்ததாக டிஜிட்டல் முறையில் கையொப்பமிட "E-Sign" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் OTP-யைப் பெறுவீர்கள். OTP-ஐ என்டர் செய்து, "Submit" என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் நாமினி சேர்க்கப்படுவார்.
இந்த ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வருங்கால PF சேமிப்பு, நீங்கள் தேர்ந்தெடுத்த பயனாளிக்கு பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதிசெய்யலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications