இன்டர்நெட் இல்லாமல் PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்!

ஓய்வூதியத்திற்காக சேமிக்க விரும்பும் நபர்களுக்கு EPF திட்டம் பெரிதும் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்கும் நபர்கள் தங்களுடைய சேமிப்புகளை அவ்வப்போது கண்காணிப்பது முக்கியம். ஆனால் எல்லோரும் இணைய வசதி கிடைக்கும் பகுதிகளில் வசிப்பதில்லை. அப்படி இருக்க இணையதளமே இல்லாமல் எப்படி உங்களுடைய PF பேலன்ஸை தெரிந்து கொள்வது? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

உங்கள் PF பேலன்ஸை தெரிந்து கொள்ள ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அல்லது மொபைல் டேட்டா கூட தேவையில்லை. எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதற்காக EPFO அமைப்பு மெசேஜிங் மற்றும் மிஸ்டு கால் சேவைகளை வழங்குகிறது.

இன்டர்நெட் இல்லாமல் PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்!

மிஸ்டு கால்: உங்கள் PF பேலன்ஸை தெரிந்து கொள்வதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று மிஸ்டு காலை மேற்கொள்வது. நீங்கள் EPFO இணையதளத்தில் பதிவு செய்த மொபைல் நம்பரில் இருந்து 9966044425 என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும். சில வினாடிகளுக்கு பிறகு உங்களுடைய அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.

பிறகு தற்போதைய PF பேலன்ஸ் விவரங்களுடன் ஒரு SMS உங்களுக்கு அனுப்பப்படும். இந்த சேவையைப் பயன்படுத்தி PF பேலன்ஸை தெரிந்து கொள்ள உங்களுடைய யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்கள் மொபைல் நம்பர் UAN கணக்குடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தது ஆதார் கார்டு பான் கார்டு அல்லது பேங்க் விவரங்கள் போன்ற ஏதேனும் ஒரு KYC ஆவணத்தை கொண்டு அக்கவுண்டை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.

இந்தச் சேவையை EPFO அமைப்பு முழுக்க முழுக்க இலவசமாக வழங்குகிறது. எனவே EPFO அமைப்பின் கீழ் உறுப்பினராக இருப்பவர்கள் தங்களுடைய பேசிக் மாடல் மொபைல்களில் இருந்தும் இந்த வசதியைப் பெறலாம்.

SMS சேவை: PF பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கான மற்றொரு வழி 7738299899 என்ற நம்பருக்கு SMS அனுப்புவது. கீழ்காணும் மெசேஜ் ஃபார்மெட்-இன் அடிப்படையில் மெசேஜ் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் உங்களுடைய PF பேலன்ஸ், கடைசியாக நீங்கள் செய்த பங்களிப்பு மற்றும் கேஒய்சி ஸ்டேட்டஸ் போன்ற விவரங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

மெசேஜ் ஃபார்மெட்: EPFOHO UAN

சிலருக்கு மொழி பிரச்சனை பெரிய பிரச்சினையாக இருக்கும் எனவே மெசேஜை உங்களுடைய பிராந்திய மொழியில் பெற விரும்பினால் நீங்கள் மெசேஜ் ஃபார்மேட்டின் கீழ், மெசேஜ் பெற விரும்பும் மொழியின் முதல் 3 எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும்.

உதாரணமாக ஹிந்தி மொழியில் மெசேஜ் பெற விரும்பினால் EPFOHO UAN HIN என்ற ஃபார்மெட்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும் EPF அமைப்பின் கீழ் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மெசேஜை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+