நாம் அனைவரும் ஏதோ ஒரு இலக்கிற்காக பணம் சேமிக்கிறோம். அதற்காக சேமிப்பு கணக்குகள், பிக்சட் டெபாசிட்கள், RD கணக்குகள், சிறுசேமிப்புத் திட்டங்கள் என பலவற்றில் முதலீடு செய்கிறோம். அதன்படி இந்த திட்டங்களுக்கும் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். சில திட்டங்களில் நாம் செய்யக்கூடிய டெபாசிட் தொகையை முதிர்வு காலத்திற்கு முன்பே நிபந்தனைகளில் கீழ் பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற ஒரு திட்டத்தை தான் EPFO அமைப்பு வழங்குகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், திருமணம், கல்வி, வீட்டுக் கடன்கள் மற்றும் பிற தேவைகளைச் சமாளிக்க பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்றால் என்ன?: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதன் கீழ், சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்யப்படுகிறது மற்றும் முதலாளிகளும் அதற்கு பங்களிக்க வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஓய்வு பெறும்போது பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவ அவசரத்திற்காக PF தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான வரம்பு என்ன?:
மருத்துவ அவசரநிலை அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை போன்ற சில நிபந்தனைகளில் EPFO உறுப்பினர்கள் ரூ.1 லட்சம் வரை PF தொகையை எடுக்கலாம். முன்பு, மருத்துவமனை வழங்கிய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தப் பணத்தை எடுக்க முடியும். தற்போது இந்த வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PF தொகையை மருத்துவச் செலவுக்காக முன்கூட்டியே பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும். யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN), பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 2: அடுத்து, நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அதன் பின் "Online Service" லிங்கை கிளிக் செய்து, நோய்க்கான உரிமைகோரல் படிவம்-31-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: "Proceed for Online Claim" என்பதைக் கிளிக் செய்யவும்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், 45 நாட்களுக்குள் மருத்துவக் கட்டணங்களை EPFO-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications