ஊழியர்களுக்கு வயதான காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு திறம்பட நிர்வகித்து வருகிறது. ஒருவர் தனது EPF தொகையைப் பெற நினைத்தால், எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஈபிஎஃப் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உங்கள் PF பணத்தை எடுப்பது, முன்பணம் பெறுவது மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை சமர்ப்பிப்பது என அனைத்தையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். இதை ஈபிஎஃப் போர்டல் அல்லது உமாங் செயலி மூலம் செய்யலாம்.
EPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்கு என முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஊதியத்தில் 12% ஈபிஎஃப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது.

உங்களை பணிக்கு அமர்த்திய நிறுவனமும் ஈபிஎஃப்-இல் உங்களது பெயரில் குறிப்பிட்ட தொகையைப் போடுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது பிஎஃப் கான்ட்ரிபியூஷன் மற்றும் ஓய்வு காலத்துக்கான பங்காக எம்ப்ளாயி பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறது.
UMANG அப்ளிகேஷன் மூலம் PF பணத்தை எப்படி பெறுவது?:
ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: உங்கள் விவரங்களுடன் உள்நுழைந்து, "services" பிரிவில் ஈபிஎஃப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: "Employee Centric Services" என்ற பிரிவுக்குச் சென்று, "Raise Claim" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன் பின் உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்த பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 6: செயல்முறை முடிந்ததும், உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும்.
ஸ்டெப் 7: இந்த ரெஃபரன்ஸ் நம்பரைப் பயன்படுத்தி, உங்கள் கோரிக்கையின் நிலையை அப்ளிகேஷனில் கண்காணிக்கலாம்.
UMANG அப்ளிகேஷன் மூலம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்கள் ஈபிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
UMANG அப்ளிகேஷனில் ஈபிஎஃப் பேலன்ஸை எவ்வாறு சரிபார்ப்பது?: உங்கள் போனில் UMANG அப்ளிகேஷனைத் திறந்து ஈபிஎஃப் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். "Employee Centric Services" என்ற பிரிவுக்குச் சென்று "View Passbook" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ என்டர் செய்தால், உங்கள் பேலன்ஸ் விவரங்கள் திரையில் காட்டப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications