தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, வாட்ஸ் அப்பிலேயே பல்வேறு சேவைகளை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிளிக்கிலேயே நம் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு யுஏஎன் நம்பர் கூட தேவையில்லை.
ஈபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் எண்ணை உங்களது போனில் சேமித்து, வாட்ஸ்அப் மூலம் எளிதாக பல பிஎஃப் சேவைகளை பெறலாம். இந்த வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை சரிபார்த்தல் , உங்கள் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் வரவு-செலவு விவரங்களை பார்க்கலாம். மேலும் உங்களது பிஎஃப் பாஸ்புக்கை வாட்ஸ்அப் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் மொபைலில் EPFO-வின் அதிகாரப்பூர்வ எண்ணான +91 8796441800 எண்ணை சேமித்து கொள்ளவும்.பின்னர் வாட்ஸ்அப்பில் அந்த எண்ணுக்கு Hi என டைப் செய்து அனுப்ப வேண்டும். உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணான UAN நம்பருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தே இந்த வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். எனவே அந்த நம்பரில் வாட்ஸ் அப் பயன்படுத்தினால் தான் இந்த வசதிகள் கிடைக்கும்.
இதன் பின் சாட்பாட் உங்களிடம் விருப்பமான மொழியை கேட்கும். அதில் உங்களுக்கு பொருத்தமான மொழியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் மெனுவில் காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து பேலன்ஸ் சரிபார்த்தல், கடைசி 5 பரிவர்த்தனைகள் அல்லது பாஸ்புக் பதிவிறக்கம் என உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.
இதனை அடுத்து பாதுகாப்புக்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்த்த பிறகு, உங்களுக்கான தகவல்கள் வாட்ஸ்அப்பிலேயே மெசேஜாக காட்டும்.
முதலில் பேலன்ஸ் சரிபார்க்க check balance என்பதை தேர்வு செய்யவும். இதன் பின்னர் ஓடிபி-ஐ உள்ளிட்டால் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை மெசேஜாக பெறலாம். மேலும் வாட்ஸ்அப் மெனுவில் Download Passbook என்பதை தேர்ந்தெடுத்தவுடன், உங்களுடைய பாஸ்புக் பாதுகாக்கப்பட்ட PDF கோப்பாக அனுப்பப்படும். இந்த PDF-ஐ உங்கள் பிறந்த தேதியை DDMMYY என்ற வடிவத்தில் பாஸ்வேர்டாக கொடுத்து பாஸ்புக்கை பார்த்து கொள்ளலாம்.
உங்களுடைய UAN எண்ணுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் ஐடிக்கள் இணைக்கப்பட்டிருந்தால், எந்த ஐடிக்கான விவரங்கள் வேண்டும் என்பதை நீங்கள் தனித்தனியாக தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும், எந்த காலத்திலும் உங்களது பாஸ்வேர்ட், ஓடிபி, ஆதார் அல்லது பான் எண்களை வாட்ஸ்அப் மூலம் ஈபிஎஃப்ஓ கேட்பதில்லை. எனவே தெரியாத நபர்களின் அழைப்புகளுக்கோ அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்புகளுக்கோ உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என ஈபிஎஃப்ஓ அறிவுறுத்தியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

