பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி என்பது அரசின் கீழ் செயல்படும் ஒரு திட்டமாகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பாளத்தில் 12%மும், அதற்கு சமமான தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கிற்கு செலுத்துவார்கள்.
இந்த தொகைக்கு வட்டி விகிதமும் அதிகம். வரிச் சலுகையும் கிடைக்கும். இது ஊழியர்களின் நலன் கருதி எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவும் இருந்து வருகின்றது.
இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாம்
இந்த பிஎஃப் கணக்கில் உள்ள பேலன்ஸினை தெரிந்து கொள்ள, இபிஎஃப்ஓ (EPFO)வின் இணைய பக்கத்தில் சென்று லாகின் செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு இணைய வசதி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் நீங்கள் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இருப்பினை இணைய வசதி இல்லாமலும் தெரிந்து கொள்ளலாம். அது எப்படி எந்தெந்த வகையில் தெரிந்து கொள்ளலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
SMS மூலம் பார்க்கலாம்
உங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இதே தமிழில் வேண்டுமெணில் TAM என்பதை டைப் செய்து அனுப்பலாம்.
மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம்
உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும், பிஎஃப் கணக்கில் இருப்பினை தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் 011 22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம்.
உமாங் ஆப்
Umang app ஆப்பினை பயன்படுத்தியும் பேலன்ஸினைக் தெரிந்து கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். இந்த ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் EPFO என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் Employee Centric Services என்ற ஆப்சனில் பாஸ்புக் வியூ என்ற ஆப்சனை க்ளிக் செய்யலாம். அதன் பிறகு UAN நம்பர் மற்றும் passwordஐ கொடுக்க வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும், இந்த ஓடிபியினை பதிவு செய்யும்போது, இபிஎஃப் இருப்பினை பார்த்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications