நம் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாக என்றென்றும் இருப்பது நமது திருமணம். இதனால் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த பலரும் விரும்புகிறார்கள். விலை உயர்ந்த ஆடைகள், பிரபலமான மண்டபத்தில் திருமணம், தடபுடலான விருந்து, இசை கச்சேரி என்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்துகிறார்கள்.
கையில் பணம் இல்லை என்றாலும் கவலைப்படாமல் சிலர் கடன் வாங்கி திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகிறார்கள். ஆனால் திருமணங்கள் ஏற்கனவே விலையுயர்ந்த விவகாரம் அப்படிப்பட்ட நிலையில் திருமணத்துக்காக கடன் வாங்குவது புத்திசாலித்தனமான நிதி நடவடிக்கை அல்ல என்றும் உங்களிடம் இருக்கும் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி திருமண செலவுகளை மேற்கொள்வது நன்மை அளிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) பதிவு செய்த முதலீட்டு ஆலோசகர் மற்றும் ஸ்டேபிள் இன்வெஸ்டர் நிறுவனர் தேவ் ஆஷிஷ் கூறுகையில், கல்யாணத்திற்காக கடன் வாங்குவது நல்லதல்ல, இதனை சிறந்த முறையில் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கனவு திருமணத்தின் பட்ஜெட்டுக்கு உங்கள் சேமிப்பு போதுமானதாக இல்லை என்றால், பட்ஜெட்டை குறையுங்க. கடன் வாங்குவதற்கு பதிலாக உங்கள் பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கொண்டு வருவதை கருத்தில் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான கிஃபாயாத்தின் நிறுவனர் ஷிவீர் பன்சால் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு உடனடியாக கடனை திருப்பி செலுத்தும் காலம் சுமையாக இருக்காமல் இருப்பது நல்லது. திருமணமான புதிது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை காலம். அது அப்படியே இருக்கட்டும்.
திருமணக் கடன்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்குவது, உங்கள் கூட்டு நிதி இலக்குகளுக்காக கூட்டாக முதலீடு செய்ய தொடங்குவதில் உங்கள் நிதி திறனை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்.
பின்டெக் கடன் வழங்கும் நிறுவனமான CASHe நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யசோராஜ் தியாகி கூறுகையில், தம்பதிகள் முதலில் தங்கள் நிதி நிலைமையை மதிப்பிட வேண்டும். அவர்களின் நீண்ட கால இலக்குகளுடன் ஒரு யதார்த்தமான பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். அவர்கள் தங்களது முன்னுரிமை பற்றி வெளிப்படையாக தொடர்பு கொள்ள வேண்டும்.
அவர்களின் நல்வாழ்வில் நிதி ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கத்தை எடைபோடுவதன் மூலமும், மாற்று வழிகளை கருத்தில் கொள்வதன் மூலமும், தம்பதிகள் தங்கள் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் தேர்வுகளை செய்யலாம் மற்றும் அவர்களன் திருமண வாழ்க்கைக்கு மிகவும் நிலையான தொடக்கத்தை உறுதி செய்யலாம் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications