இனி வாட்ஸ் அப்பில் ITR தாக்கல் செய்யலாம்.. வரி செலுத்துவோருக்கு ரொம்ப ரொம்ப ஈஸியான செயல்முறை!

கிளியர் டேக்ஸ் (ClearTax) என்ற நிறுவனம் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்கள் வருமான வரி கணக்கை வாட்ஸ் அப் மூலமாகவே எளிதில் தாக்கல் செய்ய முடியும். வாட்ஸ் அப் மூலம் ITR-ஐ தாக்கல் செய்யும் இந்த முறை அனைவருக்கும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். இந்த சேவையானது வரி தாக்கல் செய்வதை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான சுய தொழில் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, இந்த சேவை பெரும்பாலான குறைந்த வருமான வரி செலுத்துபவர்களான ITR 1 மற்றும் ITR 4 படிவங்களை பயன்படுத்தும் நபர்களுக்கு உதவுகிறது. இந்த அம்சத்தை ITR தாக்கல் செய்யும் நபர்கள், வேறு ஒரு நபரிடம் சாட்-இல் பேசுவது போலவே தாக்கல் செய்ய முடியும். அதாவது செயல்முறை மிகவும் எளிதானதாக இருக்கும். இந்த புதிய அம்சம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

 இனி வாட்ஸ் அப்பில் ITR தாக்கல் செய்யலாம்.. வரி செலுத்துவோருக்கு ரொம்ப ரொம்ப ஈஸியான செயல்முறை!

வாட்ஸ்அப் ITR ஃபைலிங் சேவையின் முக்கிய அம்சங்கள்:

1. தற்போது ITR 1 மற்றும் ITR 4 படிவங்களை பயன்படுத்தும் நபர்கள் இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

2. ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

3. வாட்ஸ்அப் மூலம் பாதுகாப்பான முறையில் பணத்தை செலுத்தலாம்.

4. ஒரு சில செயல்முறைகளுக்கு படங்கள், ஆடியோ அல்லது ஃபைல்களைப் பயன்படுத்தி தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

5. ஒவ்வொரு ஸ்டெப்களுக்கும், தேவைப்பட்டால் AI bot-களிடம் இருந்து உடனடி உதவியை நீங்கள் பெறலாம்.

6. உங்களின் சேமிப்பை அதிகரிக்க AI சிறந்த வரி முறையைத் தேர்வு செய்கிறது.

வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி ITR-ஐ எவ்வாறு தாக்கல் செய்வது?

ஸ்டெப் 1: கிளியர் டேக்ஸின் வாட்ஸ்அப் எண்ணை உங்கள் ஃபோனில் சேமித்து வைத்து "Hi" என்று மெசேஜ் அனுப்புங்கள்.

ஸ்டெப் 2: ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற 10 மொழிகளில் இருந்து, உங்களுக்கு தெரிந்த மொழியைத் தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 3: கேட்கப்படும் போது உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களை வழங்க வேண்டும்.

ஸ்டெப் 4: படங்கள், ஆடியோ அல்லது டெக்ஸ்ட் மூலம் உங்கள் ஆவணங்களை அனுப்பவும்.

ஸ்டெப் 5: ITR 1 அல்லது ITR 4 படிவத்தை பூர்த்தி செய்வதற்கு AI bot-ஐப் பயன்படுத்தவும்.

ஸ்டெப் 6: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை மதிப்பாய்வு செய்து, தேவைப்பட்டால் திருத்தங்களைச் செய்யுங்கள்.

ஸ்டெப் 7: வாட்ஸ்அப் மூலமாகவே பாதுகாப்பாக பணம் செலுத்துங்கள்.

உங்கள் ITR தாக்கல் வெற்றிகரமாக இருந்தால், கன்பர்மேஷன் மெசேஜ் கிடைக்கும். இந்த புதிய வசதி மூலம், ITR தாக்கல் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். வயதானவர்கள் முதல்முறையாக ITR தாக்கல் செய்பவர்கள் போன்ற நபர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவிகரமானதாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+