Fiscal deficit-ன்னா என்னங்கய்யா..? பட்ஜெட் & நிதி கலைச் சொற்கள்..!

பட்ஜெட் என்கிற சொல்லைச் சொன்ன உடன், பத்திரிகைகளில் எல்லாம் பல புதிய வார்த்தைகள் வரும். அந்த வார்த்தைகள், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்காது.

ஆனால் அந்த வார்த்தைகளை எளிதில் கடந்துச் செல்லவும் முடியாது. அந்த அளவுக்கு மிக முக்கியமான வார்த்தைகளாக இருக்கும்.

அப்படிப்பட்ட சில வார்த்தைகளை, இந்த கட்டுரையில், எளிய தமிழில் பார்க்கப் போகிறோம். முதலில் Non-tax revenue-வில் இருந்து தொடங்குவோம்.

Non-tax revenue

Non-tax revenue

பொதுவாக அரசுக்கு வருவாய் இரண்டு பெரிய வழிகளில் இருந்து வரும். 1. வரி சார்ந்த வருவாய்கள் - ஜிஎஸ்டி, வருமான வரி, சுங்க வரி, கலால் வரி என சொல்லிக் கொண்டே போகலாம். 2. வரி அல்லாத வருவாய்கள் - ரயில்வேஸில் இருந்து வரும் வருவாய், எல் ஐ சி நிறுவனத்தில் இருந்து வரும் ஈவுத் தொகை, ஆர்பிஐயிடம் இருந்தும் வரும் ஈவுத் தொகை எனச் சொல்லலாம். இந்த இரண்டாவது வரி அல்லாத வருவாய்களைத் தான் Non Tax revenue என்கிறோம்.

Tax abatement

Tax abatement

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட வரியைச் செலுத்த வேண்டாம் எனச் சொல்வது தான் இந்த Tax abatement. இந்த Tax abatement பல வழிகளில், மத்திய அரசு பலருக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் யாருக்கு என்ன புதிதாகச் சொல்வார்கள் எனப் பார்ப்போம்.

Fiscal deficit

Fiscal deficit

ஒரு நாட்டு அரசு செலவழிக்கும் தொகையை விட, அந்த நாட்டு அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தால், அதைத் தான் நாம் Fiscal deficit என்று சொல்கிறோம். உதாரணம்: இந்தியாவின் மொத்த செலவு 100 ரூபாய், மொத்த வருவாய் 80 ரூபாய் என்றால் Fiscal deficit 20 ரூபாய். பல ஆண்டு காலமாக இந்த Fiscal deficit பிரச்னையை சரி செய்ய போராடிக் கொண்டு இருக்கிறது இந்தியா.

Primary deficit

Primary deficit

மேலே சொன்ன Fiscal deficit-ல் இருந்து வட்டிச் செலவுகளை மட்டும் கழித்துக் கொண்டால் கிடைப்பது Primary deficit.
உதாரணம்: மொத்த செலவு 100 ரூபாய் (90 ரூபாய் மற்ற செலவுகள் + 10 ரூபாய் வட்டிச் செலவுகள்) - மொத்த வருவாய் 80 ரூபாய் = 20 ரூபாய் Fiscal deficit.
இந்த 20 ரூபாய் Fiscal deficit - 10 ரூபாய் வட்டிச் செலவுகள் = 10 ரூபாய் தான் primary deficit.

Trade deficit

Trade deficit

ஒரு நாட்டின் பொருளாதாரம், செய்யும் மொத்த இறக்குமதியை விட, ஏற்றுமதி குறைவாக இருந்தால் வருவது தான் இந்த Trade deficit. இந்தியாவில் இந்த பிரச்னையும் உண்டு. எப்போதும் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாகத் தான் இருக்கிறது.

Revenue deficit

Revenue deficit

ஏற்கனவே பட்ஜெட்டில் சொல்லி இருந்த அளவை விட குறைவான வருவாயை ஈட்டி இருந்தால் அதற்குப் பெயர் தான் Revenue deficit. உதாரணம்: இந்த 2019 - 20 நிதி ஆண்டில் வருமான வரியாக 10 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் 9 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறார்கள் என்றால், மீதமுள்ள 1 லட்சம் கோடி ரூபாயை Revenue deficit என்போம்.

Revenue Surplus

Revenue Surplus

பட்ஜெட்டில் சொல்லி இருக்கும் அளவை விட அதிகமாக வருவாயை ஈட்டினால் அது தான் Revenue Surplus. உதாரணம்: 2019 - 20 நிதி ஆண்டில் 10 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி மூலம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் வருட முடிவில் 12 லட்சம் கோடி வசூல் செய்துவிட்டார்கள் என்றால், இந்த கூடுதலாக வசூலித்த 2 லட்சம் கோடி ரூபாய் தான் Revenue Surplus.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+