Finance bill என்றால் என்ன..? இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பட்ஜெட், எதில் பார்த்தாலும் பட்ஜெட் தொடர்பான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

பங்குச் சந்தை வேறு படு பயங்கரமாக சரிந்து இருக்கிறது. இன்று சென்செக்ஸ் 41,323 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

முதலீடுகள் சரிவு, ஜிடிபி சரிவு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு என பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிதி அமைச்சர் தன் பட்ஜெட்டை, பிப்ரவரி 01-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் செய்திகளை படிப்பதற்கு முன், கொஞ்சம் கலைச் சொற்களை படிப்போமா..?

Fiscal year
 

Fiscal year

இதை தமிழில் நிதி ஆண்டு எனச் சொல்வோம். இந்தியாவைப் பொருத்த வரை ஒரு நிதி ஆண்டு என்பது ஒரு ஆண்டின் ஏப்ரல் 01-ம் தேதி முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதி வரை என நிர்ணயித்து இருக்கிறார்கள். உதாரணம்: 01 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2020 வரை ஒரு நிதி ஆண்டு. இதைத் தான் 2019 - 20 நிதி ஆண்டு என்கிறோம்.

Annual Financial Statement

Annual Financial Statement

நாம் சகஜமாக பட்ஜெட் டாக்குமெண்ட்களை "யூனியன் பட்ஜெட்" அல்லது "பட்ஜெட்" என அழைக்கிறோம். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112-வது பிரிவின் படி, பட்ஜெட் டாக்குமெண்ட்களை Annual Financial Statement என்று தான் அழைக்க வேண்டும். இந்த Annual Financial Statement-ல் அடுத்த நிதி ஆண்டில் வர இருக்கும் வருவாய்கள் மற்றும் செலவுகளை மதிப்பிட்டு இருப்பார்கள். இதைத் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

Finance Bill

Finance Bill

இந்தியாவில் பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வந்தால், அது வெறும் அறிவிப்பு தான். அந்த அறிவிப்பு சட்டமாக வேண்டும் என்றால், அதற்கு நிதிச் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

உதாரணம்: இனி 2.5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என ஒரு பட்ஜெட் அறிவிப்பு வருகிறது என்றால், அதை முறையாக நிதிச் சட்டத்தில் கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும். அப்போது தான் அது சட்டமாகும். அது சட்டமானால் தான் மக்கள் அதில் இருந்து பயன் பெற முடியும்.

Appropriation Bill
 

Appropriation Bill

அரசுக்கு தேவையான பணத்தை அரசாங்க கஜானாவில் இருந்து பெற வழி வகை செய்யும் சட்டம் இது. இந்த Appropriation Bill முறையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் தான், அரசாங்கத்துக்கு, அரசு கஜானாவில் இருந்து பணம் கிடைக்கும்.

Consolidated Fund

Consolidated Fund

அரசாங்கம் வசூலிக்கும் மொத்த வருவாய்கள் மற்றும் அரசு வாங்கும் கடன் தொகை எல்லாமே இந்த Consolidated Fund-ல் தான் வந்து சேரும். பட்ஜெட்டில் திட்டமிட்ட படி செலவுகள் வந்தால், அதற்கு இந்த பணத்தைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த Consolidated Fund-ல் இருந்து பணத்தை எடுக்க, பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும்.

Contingency Fund

Contingency Fund

இந்த Contingency Fund ஒரு அவசர கால நிதி போல செயல்படும். இந்த Contingency Fund-ஐ இந்திய குடியரசுத் தலைவர் தான் வழங்க முடியும். இந்த Contingency Fund-ல் இருந்து ஏதாவது செலவழிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும். இந்த Contingency Fund-ல் இருந்து செலவழிக்கும் பணத்துக்கு மேலே சொன்ன Consolidated Fund-ல் இருந்து பணத்தை ரீ ஃபண்ட் செய்து விடுவார்களாம்.

Public Account

Public Account

மத்திய அரசு ஒரு வங்கியைப் போல, மக்களிடம் இருந்து பணம் வாங்குவது, பணம் போட்ட மக்களுக்கு தேவையான போது பணத்தைக் கொடுப்பது போன்ற சேவைகளை வழங்கும் எல்லாமே Public Account என்று சொல்லலாம். உதாரணம் Provident fund deposits மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

finance terminologies with simple explanation part 1

Know the simple meaning of some finance terminologies part 1 which we heard very often.
Story first published: Tuesday, January 21, 2020, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more