சமீபத்திய காலமாக வங்கிகளில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு கடன் வாங்குபவர்களுக்கு மேலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம்.
எனினும் இந்த காலக்கட்டத்திலும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்க என்ன வழி? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சிபில் ஸ்கோர்?
முடிந்த மட்டில் உங்களது சிபில் ஸ்கோரினை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது வீட்டுக் கடன் மட்டும் அல்ல, எல்லா கடன்களுக்கும் குறைந்த வட்டியில் வாங்க வழிவகுக்கும்.
ஆக வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்த பழங்குங்கள். இதுவே உங்களின் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம் குறைவான வட்டியிலும் நீங்கள் கடன் வாங்க முடியும். பொதுவாக 750-க்கும் மேலாக உங்க கடன் மதிப்பெண் இருந்தால், எளிதில் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.
குறைந்த அளவு பணம் வாங்கலாம்
ஆர்பிஐ கடன் வழங்குபவர்களுக்கு சொத்து மதிப்பில் 75% முதல் 90% வரையில் கடன் கொடுக்க அனுமதிக்கிறது. ஆக மீதமுள்ள 10% - 25% வரையில் நீங்களாக செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கான வட்டி விகிதம் என்பது உங்களது கடன் பரிவர்த்தனைகளை பொறுத்து இருக்கும். உங்கள் வருமானத்தின் அடிப்படையில் திரும்ப செலுத்தக்கூடிய தொகையை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் பட்ஜெட்டிற்குள் சொத்தினை வாங்குங்கள். அதுவே உங்களின் கடன் அளவை குறைக்க வழிவகுக்கும்.
டிரான்ஸ்பர் ஹோம் லோன்
நீங்கள் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அங்கு வட்டி அதிகம், இதனை விட மற்ற வங்கிகளில் கடன் கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். தாராளமாக உங்களது கடனை மற்ற வங்கிகளுக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். சிறிய அளவிலான வட்டி குறைப்பு கூட பெரியளவிலான தொகையை சேமிக்க உதவும்.
குறிப்பாக மிகப்பெரிய அளவில் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது மிக நல்ல விஷயமாக இருக்கும். இது லோன் டிரான்ஸ்பர், லோன் டாப் அப் என பல வகையிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். எங்கு குறைவான வட்டி கிடைக்கிறதோ அங்கு வாங்கலாம்.
கணிசமான அளவு பணம் செலுத்துங்கள்
ஆர்பிஐ கடன் வழங்குபவர்களுக்கு சொத்து மதிப்பில் 75 - 90% வரை வீட்டுக் கடனாக அனுமதிக்கலாம். மீதமுள்ள 10 - 25% தொகையினை நீங்களாக செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் கடன் தொகையும் குறையும். அதோடு உங்கள் பட்ஜெட்டில் தேர்ந்தெடுக்கும்போது இன்னும் உங்கள் கடன் தொகை குறைய இது வழிவகுக்கும்.
கோ அப்ளிகெண்டினை சேருங்கள்
வட்டி விகிதத்தினை குறைக்க மற்றொரு முக்கிய வழி உங்களது கடன் விண்ணப்பத்திலேயே, கோ அப்ளிகெண்டினையும் சேருங்கள். இதன் மூலம் உங்கள் ஹோம் லோனுக்கான பிரச்சனையை குறைக்க முடியும். இது உங்களது தகுதியினையும் அதிகரிக்கும். ஏனெனில் நீங்கள் உங்களது கூடுதல் வருமானத்தினையும் காட்டுகிறீர்கள். இது கிரெடிட் ஸ்கோரினையும் அதிகமாக காட்டும். ஆக இது எளிதில் குறைவான வட்டியில் கடன் வாங்க வழிவகுக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications