எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா இதனை தெரிஞ்சு வச்சுக்கோங்க..அவசியம் தேவைப்படும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனியார் வங்கிகளுக்கு கடும்போட்டியாளாராக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நாட்டின் முன்னணி கடன் வழங்குனர் மட்டும் அல்ல. தொழில் நுட்பங்களையும் தனியார் வங்கிகளை விட சிறப்பாக கொடுத்து வரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும்.

 

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மைய சேவைகளை ஆன்லைனிலேயே பெரும் வசதியினை இவ்வங்கி கொண்டுள்ளது,.

அந்த வகையில் ஆன்லைனில் பல வகையான சேவைகளை கொடுத்து வரும் எஸ்பிஐ, அதன் இணைய வங்கியின் பாஸ்வேர்டினையோ அல்லது யூசர் ஐடியையோ மறந்து விட்டால் என்ன செய்வது? அதனை எப்படி திரும்ப பெறுவது? அதனை ஆன்லைனில் எப்படி பெறுவது வாருங்கள் பார்க்கலாம்.

ஆன்லைனிலேயே பல சேவைகள்

ஆன்லைனிலேயே பல சேவைகள்

எஸ்பிஐ இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பல்வேறு முக்கிய சேவைகளை கூட ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளும் விதமாக, பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் வங்கிகளுக்கோ அல்லது ஏடிஎம்-க்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிதான ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

லாகின் ஐடி & பாஸ்வேர்டு?

லாகின் ஐடி & பாஸ்வேர்டு?

உங்களது இணைய வங்கியின் பாஸ்வேர்டு ஐடி கொடுத்து எளிதில் லாகின் செய்து தேவையான சேவைகளை இணைய வங்கியிலேயே பெற்றுக் கொள்ளலாம். சில சமயங்கள் அந்த பாஸ்வேர்டு லாகின் ஐடி சிலருக்கு மறந்துவிடும். அதனை எப்படி லாகின் செய்வது? லாகின் ஐடி பாஸ்வேர்டு இல்லாமல் வேறு எந்த வசதியினையுமே பெற முடியாது. ஆக எப்படி முதலி இந்த இணைய லாகின் ஐடி பாஸ்வேர்டினை பெறுவது? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி யூசர் ஐடி பெறுவது?
 

எப்படி யூசர் ஐடி பெறுவது?

இதற்காக நீங்கள் முதலில் https://www.onlinesbi.sbi/ தளத்திற்கு செல்லுங்கள். அதில் பர்சனல் பேங்கிங் என்ற ஆப்சனின் கீழ், லாகின் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அது மறுபக்கத்தில் தொடங்கும். அதில் Continue to login என்ற ஆப்சனை கொடுக்கவும். அதனை கிளிக் செய்தால் அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் forget username/login password என்பதை கொடுத்தால், அது சிறிய பக்கத்தில் தொடங்கும்.

அடுத்ததாக forgot my login password, forgot username உள்ளிட்ட சில ஆப்சங்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் forgot username என்பதை கிளிக் செய்து,Next என்பதை கிளிக் செய்தால் இது அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

அதில் CIF number-ஐ கொடுக்க வேண்டும், அடுத்ததாக எந்த நாடு, உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கொடுத்து, கேப்ட்சா எழுத்தினையும் பதிவு செய்ய வேண்டும். அதனை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியினை கொடுத்து கன்பார்ம் செய்து கொள்ளவும். அதன் பிறகு உங்களது பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு உங்களது யூசர் ஐடி வரும்.

எப்படி பாஸ்வேர்டினை பெறுவது?

எப்படி பாஸ்வேர்டினை பெறுவது?

இதற்காக நீங்கள் முதலில் https://www.onlinesbi.sbi/ தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பர்சனல் பேங்கிங் என்ற ஆப்சனின் கீழ், லாகின் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அது மறுபக்கத்தில் தொடங்கும். அதில் Continue to login என்ற ஆப்சனை கொடுக்கவும். அதனை கிளிக் செய்தால் அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் forget username/login password என்பதை கொடுத்தால், அது சிறிய பக்கத்தில் தொடங்கும்.

அடுத்ததாக forgot my login password, forgot username உள்ளிட்ட சில ஆப்சங்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் forgot password என்பதை கிளிக் செய்து, Next என்பதை கிளிக் செய்தால் இது அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

இதில் உங்களது பெயர், உங்களது வங்கிக் கணக்கு எண்., எந்த நாடு, மொபைல் நம்பர், பிறந்த தேதி என்பதை கொடுத்து, கேப்ட்சா எழுத்தினையும் சரியாக கொடுத்து SUBMIT என்பதை கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி ஒன்று வரும்.

இங்கு பாஸ்வேர்டினை மூன்று விதங்களில் மாற்றியமைக்க முடியும். ஒன்று ஏடிஎம் கார்டு விவரங்கள் கொடுத்து மாற்றலாம். அதில் எது உங்களுக்கு எளிதானதோ அதனை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

Forgot SBI username and password: how can you take back both?

You can easily log in by giving your Internet Banking Password ID and avail the required services in Internet Banking. How to get that password, id if forgotten?
Story first published: Sunday, December 25, 2022, 20:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X