யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) என்பது அத்தியாவசியமான 12-இலக்க எண்ணாகும். இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்குகளை நிர்வகிக்க உதவும் நம்பராகும். உங்கள் PF பேலன்ஸை சரி பார்க்கும்போது, PF தொகையைக் கிளைம் செய்யும்போது அல்லது EPF தொடர்பான பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெறுவதற்கு UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கட்டாயமாகும். இந்தப் பதிவில் பாஸ்வேர்டை மறந்து விட்டால் எப்படி புதிய பாஸ்வேர்டை அமைப்பது என்பது குறித்து பார்ப்போம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) வழங்கப்படும் UAN, ஊழியர்களுக்கான தனிப்பட்ட எண்ணாகும். EPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்கு என முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஊதியத்தில் 12% ஈபிஎஃப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. நீங்கள் ஓய்வு பெறும்போது இந்த PF தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

UAN பாஸ்வேர்டு மறந்துவிட்டால் என்ன செய்வது?: உங்கள் UAN பாஸ்வேர்டை மறந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதை மீட்டெடுக்க கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் "Forgot Password" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய UAN நம்பர் மற்றும் திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா கோடை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: UAN மற்றும் கேப்ட்சாவைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: OTP மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்த பிறகு, புதிய பாஸ்வேர்டை அமைக்கவும். பாஸ்வேர்டை கிரியேட் செய்யும்போது ஸ்பெஷல் கேரக்டர்கள், நம்பர்கள், கேப்பிட்டல் லெட்டர்கள் போன்றவை கலந்து இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிலர் எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வோர்ட்களை பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு.
ஸ்டெப் 6: உங்கள் பாஸ்வேர்டை மாற்றியவுடன், உங்கள் EPF கணக்கில் உள்நுழைய அதைப் பயன்படுத்தவும். இந்த பாஸ்வேர்டைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும், மற்றவர்களுடன் ஒருபோதும் பகிர வேண்டாம்.இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் UAN பாஸ்வேர்டை விரைவாக மீட்டெடுக்கலாம் மற்றும் உங்கள் EPF கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெறலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications