இந்தியாவில் என்ன தான் நெட் பேங்கிங், யுபிஐ சேவைகள் வந்தாலும் இன்றளவும் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு செக் எனப்படும் காசோலைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வங்கிகளில் நாம் இந்த காசோலைகளை டெபாசிட் செய்தோம் என்றால் நம்முடைய வங்கி கணக்கிற்கு அந்த பணம் வருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படும்.
ரிசர்வ் வங்கி அக்டோபர் நான்காம் தேதியிலிருந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அன்றைய நாளிலேயே அதாவது அடுத்த சில மணி நேரங்களிலேயே தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளது. அதாவது செக் டெபாசிட் செய்த அதே நாளில் பணம் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது .

இனி செக்குகளை நாம் வங்கியில் போட்டால் அதே நாளில் கிளியர் ஆகி பணம் உங்களுடைய கணக்கிற்கு வந்து விடும். ஒரு வேளை காசோலையில் உள்ள விவரங்கள் தவறாக இருந்தால் அதே நாளில் பணம் காசோலை க்ளியர் ஆகி பணம் கணக்கிற்கு வராது, அதேபோல காசோலை வழங்கிய நபரின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றால் அது பவுன்ஸ் ஆகிவிடும். எனவே பொதுமக்கள் சரியான முறையில் பூர்த்தி செய்து காசோலைகளை வழங்கியிருந்தால் அதனை போட்ட அதே நாளில் வங்கியில் பணமாக பெற்றுக்கொள்ளலாம் .
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவில் அக்டோபர் 4 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3 வரை முதல் கட்டமாகவும் ஜனவரி 3 முதல் இரண்டாம் கட்டமாகவும் இது செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது . இந்த திட்டத்தின் படி காலை 10 மணியிலிருந்து காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை காசோலைகளை டெபாசிட் செய்தால் அன்றைய தினமே பணம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
வங்கிகள் பொதுவாக தங்களுக்கு வரும் காசோலைகளை ஒவ்வொரு குழுவாக பிரித்து தான் கிளியரிங் மையத்திற்கு அனுப்பும் இதுதான் காசோலை பணமாகி மாறி நம் கணக்கிற்கு வர தாமதம் ஆகிறது. இனி அப்படி குழுவாக பிரிக்காமல் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் வங்கிகள் தங்களுக்கு வந்துள்ள காசோலைகளை கிளியரிங் மையத்திற்கு அனுப்பும்.
கிளியரிங் மையம் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு காசோலையின் படத்தை அனுப்பும். இதன் அடுத்து சம்பந்தப்பட்ட வங்கி காசோலை செல்லுமா, பணம் கணக்கில் மாற்றப்படுமா என்பதை கிளியரிங் மையத்திற்கு கூறிவிடும். இதனால் செக் போட்ட அதே நாளில் பணம் கணக்கிற்கு வந்துவிடுகிறது.
ஏற்கனவே எச்டிஎப்சி , ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் இனி காசோலைகள் கிளியர் ஆகிவிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன . இனி வங்கி நேரம் முழுவதுமே இந்த காசோலைகள் கிளியர் செய்யப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது .இந்த புதிய அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்றால் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக அது கிளியரிங் சேவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வணிகம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை மிகப்பெரிய உதவியாக இருக்கும். அவர்கள் தொழில் முதலீட்டுக்கு தேவையான பணம் என்பது அதே நாளில் அவர்களுக்கு கிடைத்துவிடும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான காசோலை கிளியரிங் நடைமுறை என்பது அமலில் வரும் .
1980 க்கு முன்பு வரை நாம் காசோலைகளில் டெபாசிட் செய்தால் வங்கி ஊழியர்கள் அவற்றை சரி பார்த்து நம் கணக்கில் பணம் வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகும் பின்னர் 1980களில் அது ஒன்றிலிருந்து மூன்று நாட்கள் என மாறியது தற்போது அது ஒரு நாள் அதாவது சில மணி நேரங்களுக்குள்ளேயே என மாறி இருக்கிறது. வணிகம் செய்பவர்களுக்கு ஒரே நாளில் காசோலைகள் கிளியராவது என்பது வேகமான அதே வேளையில் நம்பகமான பண பரிமாற்றத்திற்கு உதவுகிறது.


Click it and Unblock the Notifications