இந்தியாவில் முக்கியமான முகவரி தொடர்பான ஆதாரங்கள் என்றால்.. அது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டும் தான். வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும் பான் கார்டு முக்கியம். சிறுவர்களின் பெயரில் ஏதேனும் சேமிப்பு திட்டங்களில் சேர வேண்டும் என்றால் அதற்கும் பான் கார்டு தற்போது தேவைப்படுகிறது. இந்நிலையில் பான் கார்டின் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக அனைவராலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தற்போது நீங்கள் அருகில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை கடைகளுக்குச் சென்று 2 மணி நேரத்திற்குள் உங்கள் டிஜிட்டல் பான் கார்டைப் பெறலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
வருமான வரித் துறையின் சமீபத்திய தரவுகள், இந்தியாவில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களில் பான் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது என்று தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2024 நிலவரப்படி, 31.05 கோடி பெண்கள் மட்டுமே பான் கார்டு பெற்றுள்ளனர். பெண்களோடு ஒப்பிடும்போது 42.10 கோடி ஆண்கள் பான் கார்டு பெற்றுள்ளனர்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது. பான் கார்டு விண்ணப்ப செயல்முறை சிக்கலானதாக இருப்பதால், பலர் விண்ணப்பிக்க தயங்குகின்றனர்.
இந்த இடைவெளியைக் குறைக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், PayNearby உட்பட பல சில்லறை விற்பனைக் கடைகள் அங்கீகரிக்கப்பட்ட PAN சேவை முகவர்களாக (PSAs) மாறியுள்ளன.
கிரானா ஸ்டோர்கள், மொபைல் ரீசார்ஜ் அவுட்லெட்டுகள், மெடிக்கல் ஸ்டோர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் உள்ளிட்ட இந்தக் கடைகள் இப்போது பான் கார்டு விண்ணப்பங்களை பெற்று பான் கார்டுகளை வழங்கி வருகிறது.
பான் கார்டு பெற தேவையான ஆவணங்களை சேகரிக்கவும்: கடைக்குச் செல்வதற்கு முன், உங்களிடம் பின்வரும் ஆவணங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
ஆதார் கார்டு மற்றும் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை, பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், குடிநீர், கேஸ்), ஓட்டுநர் உரிமம், மெட்ரிகுலேஷன் சான்றிதழ்.
சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் உங்கள் பான் கார்டைப் பெறுவதற்கான ஸ்டெப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டெப் 1: PAN சேவை ஏஜென்சியாக அங்கீகரிக்கப்பட்ட அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடையைக் கண்டறியவும். PayNearby மற்றும் உள்ளூர் கிரானா கடைகள், மொபைல் ரீசார்ஜ் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற பிற சில்லறை விற்பனையாளர்களும் பான் கார்டு சேவையை வழங்குகின்றன.
ஸ்டெப் 2: நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இருக்கிறீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள பான் கார்டை அப்டேட் செய்ய இருக்கிறீர்களா? என்பதைக் கடை ஊழியர்களிடம் தெரிவிக்கவும்.
ஸ்டெப் 3: OTP சரிபார்ப்புக்காக உங்கள் மொபைல் நம்பரை வழங்கவும்.
ஸ்டெப் 4: கடையில் இருந்து விண்ணப்பத்தை பெற்று பெயர், ஆதார் நம்பர் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் உட்பட தேவையான விவரங்களை நிரப்பவும்.
ஸ்டெப் 5: ஆதார் விவரங்களை மட்டும் பயன்படுத்தி eKYC முறையில் பான் கார்டு விண்ணப்ப செயல்முறை அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலான விண்ணப்ப செயல்முறை ஆகிய இரண்டுக்கும் இடையே விண்ணப்ப செயல்முறையைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 6: பான் கார்டை பெறுவதற்கு 107 ரூபாய் அல்லது டிஜிட்டல் பான் கார்டு பெறுவதற்கு 72 ரூபாய் பெறப்படுகிறது. இந்த இரண்டில் உங்களுக்கு எது தேவையோ அதற்கான கட்டணத்தை செலுத்துங்கள்.
ஸ்டெப் 7: கட்டணத்தைச் செலுத்திவிட்டு e-KYC செயல்முறையை முடிக்கவும். ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட்டு OTP மூலம் சரிபார்க்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications