செயற்கை நுண்ணறிவிப்பு தொழில்நுட்பம் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கால் பதித்து விட்டன. இந்த சூழலில் ஏஐ குறித்த அடிப்படை புரிதல் கொண்டிருப்பது அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் முக்கியமானதாக மாறி இருக்கிறது.
மார்க்கெட்டிங் ,கல்வி ,மருத்துவம், ஐடி என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் ஏஐ தொழில்நுட்பத்தை கற்று வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மக்கள் எளிதாக ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்த தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூகுள் நிறுவனம் இலவசமாக ஏஐ பாடங்களை ஆன்லைனிலேயே வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் கூகுள் நிறுவனம் இந்த பாடங்களை வடிவமைத்துள்ளது. https://www.cloudskillsboost.google/ என்ற இணையதளத்திற்கு சென்று இந்த இலவச வகுப்புகளில் இணையலாம். 1 மணி நேரத்திற்குள் இருக்கும்படி இவை வடிவமைப்பட்டுள்ளன.
Introduction to Generative AI: ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த அறிமுகம் மொத்தம் 45 நிமிடங்கள் கொண்டதாக இந்த பாடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெனரேட்டிவ் ஏஐ என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது என்பன குறித்த அடிப்படைகளை தெரிவிக்கக் கூடிய ஒரு பாடமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எழுத்து ,வடிவமைப்பு, திட்டமிடல் போன்ற துறைகளில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால் இந்த பாடத்தை அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.

Introduction to Large Language Models: லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் என்ற இந்த வகுப்பு ஒரு மணி நேரம் கொண்டதாக இருக்கும். தற்போது செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு எல்லாமே லாங்குவேஜ் மாடல்கள் என்பவை தான் அடிப்படையாக இருக்கின்றன . எப்படி நம்முடைய பிராம்ப்டுகளை பெற்றுக் கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இயங்குகின்றன என்பது குறித்து கூகுளின் சொந்தமான லாங்குவேஜ் மாடல் குறித்தும் இதில் விளக்கம் தரப்படுகிறது .
Introduction to Responsible AI: ஏஐ தொழில்நுட்பங்கள் எப்படி இயங்குகின்றன என்று அடிப்படை புரிதலை வழங்க கூடியதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் இதனை எப்படி பொறுப்புடன் கையாள்வது என்பது குறித்த பாடத்தை வழங்குகிறது. தலைமை பதவிகள், பாலிசி உருவாக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் இருப்பவர்களுக்கு இது மிக முக்கியமானதாக இருக்கும். 30 நிமிடங்களில் வகுப்பு முடிந்துவிடும்.
Introduction to Image Generation: ஏஐ கருவிகளை கொண்டு படங்களை உருவாக்குவது குறித்த அறிமுக வகுப்பு . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி புகைப்படங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை வீடியோக்களாக மாற்றுவது என்பது குறித்து இதில் நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
Create Image Captioning Models: புகைப்படங்களுக்கான கேப்ஷன்களை உருவாக்குவது குறித்து ஏஐ மாடல்களுக்கு பயிற்சி தருவது எப்படி என்பது இதில் கற்றுத்தரப்படும். ஈ காமர்ஸ் தளங்கள், மீடியா , சமூக வலைதளங்கள் ஆகிய வேலைகளில் இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications