தொடர்ந்து 5 ஆண்டுகள் அரசு பணி செய்யும் நபர் அந்த பணியில் இருந்து விலகுவது அல்லது ஓய்வு பெறும்போது அவர்களுக்கு என கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. நீண்ட காலமாகவே இந்த கிராஜுவிட்டி தொடர்பான ஒரு குழப்பம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நீடிக்கிறது.
ஒரு ஊழியர் ஒரு அரசு வேலையில் பணிபுரிந்து, அதிலிருந்து பணி ஓய்வு பெற்று மீண்டும் ஒரு அரசு வேலையில் சேருகிறார் எனும் போது இந்த இரண்டு அரசு வேலைகளுக்கும் அவருக்கு கிராஜுவிட்டு கிடைக்குமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. உதாரணமாக ராணுவ சேவையில் இருந்த ஓய்வு பெற்ற நபர்கள் மீண்டும் சிவில் பதவிகளில் சேர்கின்றனர் . அப்படி என்றால் இவர்களுக்கு இரண்டு வேலைக்குமான கிராஜுவிட்டி கிடைக்குமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இதனை தெளிவுபடுத்தக் கூடிய வகையில் தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் கிராஜுவிட்டி பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் ராணுவ சேவையிலிருந்து ஏற்கனவே கிராஜுவிட்டி பெற்ற ஒரு நபர் அதன் பின்னர் சிவில் சேவையில் வேலைக்கு சேர்ந்தால் அவருக்கு மீண்டும் பணிக்கொடை கிடைக்குமா என்பதை விளக்கியுள்ளது.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் இரண்டாவது கிராஜுவிட்டி பெற தகுதியற்றவர்கள் என அரசு தெரிவித்துள்ளது . அதாவது ஒரு அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றுவிட்டார் (Superannuation gratuity )அல்லது விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார் (Retiring gratuity) அல்லது கட்டாய ஓய்வின் பெயரில் கிராஜுவிட்டி பெற்ற பிறகு ஓய்வு பெற்றிருந்தாலோ (Compulsory retirement gratuity) அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டதன் பெயரில் கருணை கிராஜுவிட்டி (Compassionate gratuity following dismissal or remova) பெற்றிருந்தாலும் அவர் மீண்டும் அரசு வேலையில் சேரும்போது அவருக்கு இரண்டாவது கிராஜுவிட்டு கிடைக்காது.
அவர் ஏற்கனவே பெற்ற கிராஜுவிட்டியே இறுதியானதாக கருதப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே மேற்கண்ட சூழ்நிலைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் ஒரு அரசு பணியில் சேர்கிறார்கள் என்றால் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இரண்டாவது கிராஜுவிட்டி கிடைக்காது .
ஒரு சிலருக்கு மட்டும் இரண்டாவது கிராஜுவிட்டி கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதாவது ஒரு ஊழியர் தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர் அந்த அமைப்பின் அனுமதியோடு வேறொரு அரசு பணியில் நியமனம் செய்யப்படுகிறார் . அவர் அரசுக்கு சேவை செய்தார் எனும் போது இரண்டாவது கிராஜுவிட்டி கிடைக்கும்.
இதிலும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசு பணி ஆகிய இரண்டிலிருந்து பெறப்பட்ட மொத்த கிராஜுவிட்டி தொகையானது முழு சேவை காலத்தையும் கணக்கில் கொண்டு அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச வரம்பை மீறக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications