இந்தியாவில் பான் கார்டும் ஆதார் கார்டும் முக்கியமான அடையாள ஆவணங்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் அட்டையை பொறுத்தவரை நம்முடைய புகைப்பட அடையாள சான்றாகவும், முகவரிக்கான அடையாள சான்றாகவும் நாம் பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதேபோல நம்முடைய நிதி சார்ந்த அனைத்து விஷயங்களுக்குமே பான் கார்டு மிகவும் கட்டாயம்.
சம்பளத்தில் தொடங்கி நம்முடைய முதலீடுகள் என அனைத்திற்குமே பான் கார்டு கட்டாயமாக கேட்கப்படுகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பான் கார்டு செயல் இழந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பான் கார்டு செயலிழந்து விட்டது எனும்போது உங்களுடைய சம்பளமே கூட வராமல் போகுமாம்.

புதிதாக முதலீடு செய்வது, டாக்ஸ் ரீஃபண்ட் பெறுவது என அனைத்துமே நின்று போய்விடும் என வருமான வரித்துறை தெரிவித்து இருக்கிறது. வருமான வரி துறையின் டேக்ஸ் பட்டி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் "ஜனவரி 1 , 2026 முதல் உங்களுடைய பான் கார்டு செயல் இழக்கப் போகிறது, உங்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது ,உங்களுக்கு டேக்ஸ் ரீஃபண்ட் கிடைக்காது, உங்களுடைய சம்பளம் கூட வராமல் போகலாம் , எஸ்ஐபி போன்ற முதலீடுகள் கூட நின்று விடலாம்" என அதில் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் வரி நடைமுறைகளை வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு அரசு பான் கார்டையும் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறது . அதாவது 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் பான் கார்டு பெற்ற அனைவருமே தங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் .எனவே பான் கார்டு வைத்திருக்கக்கூடிய அனைவருமே தங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
இதற்கு https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிட்டு Validate என்பதை கிளிக் செய்து , உங்கல் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி உள்ளிட்டு சப்மிட் செய்தால் போதும் உங்களின் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை முடிக்கவில்லை என்றால் புதிதாக உங்களால் எந்த ஒரு முதலீடும் தொடங்க முடியாது, பங்குச்சந்தைகளில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது.


Click it and Unblock the Notifications