டெல்லி: இந்தியாவில் ஆன்லைனில் பணம் மோசடி செய்யப்படுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யுபிஐ மூலம் பணம் மோசடி, வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய வைத்து நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடுவது , போலியான முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆசை வார்த்தைகளை கூறி நம்மை முதலீடு செய்ய வைத்து பணம் மோசடி செய்வது என பல வகையான மோசடிகள் நாள்தோறும் புது புது வடிவத்தில் நம்மை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன.
மோசடி: சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இன்றைய நாளில் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் பணத்தை பறிகொடுத்தவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

சைபர் கிரைம் உதவி எண்: 1930 இந்த எண் மிகவும் முக்கியமானது. இதுதான் இந்தியாவில் தேசிய சைபர் க்ரைம் உதவி எண் ஆகும். நீங்கள் யுபிஐ மூலம் உங்களை பணம் திருடப்பட்டு இருக்கிறது அல்லது ஏதேனும் ஒரு போலியான லிங்கை கிளிக் செய்து உங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை திருடி இருக்கிறார்கள், மோசடியான முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட்டு ஏமாந்து விட்டீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் 1930.
முதல் 60 நிமிடங்கள் முக்கியம்: இந்த எண்ணிற்கு டயல் செய்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும். பணத்தை பறிகொடுத்து அதாவது நீங்கள் அல்லது நீங்கள் ஏமாற்றப்பட்ட முதல் 60 நிமிடங்களுக்குள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நீங்கள் ஏமாந்த பணத்தில் பெருமளவிலான தொகையை மீட்பதற்கான சாத்தியும் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள் என்றால் அடுத்த 60 நிமிடங்களுக்குள் சைபர் கிரைம் இடம் புகார் அளிப்பது உகந்தது.

ஏன் முக்கியம்: இவ்வாறு செய்யும் போது சைபர் கிரைம் அதிகாரிகளால் உடனடியாக அந்த குறிப்பிட்ட கணக்குகளை முடக்கி உங்களுடைய பணத்தை மீட்பதற்கு உதவியாக இருக்கும். அண்மையில் கூட ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபர் 80 லட்சம் ரூபாயை இதுபோல ஆன்லைனில் இழந்து அவர் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து 60 லட்சம் ரூபாயை மீட்க முடிந்தது என்கிறார் நிதி ஆலோசகர் ஏ.கே.மந்தன்.
என்னென்ன விவரம் தேவை: எனவே தான் நீங்கள் ஏமாந்த உடனே தாமதிக்காமல் சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என கூறுகிறார். பணம் பரிமாற்றம் செய்த நேரம் , எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது, எந்த கணக்கில் பணம் அனுப்பி வைத்தீர்கள் இந்த பரிமாற்றத்திற்கான ஏதேனும் ஐடி உள்ளிட்ட விவரங்கள் இருக்கிறதா என்பதை தயாராக வைத்திருக்க வேண்டும் . 1930 என்ற எண்ணில் அழைத்து புகார் பதிவு செய்து பின்னர் சைபர் கிரைமின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் புகார் அளிக்கலாம். இதில் உங்கள் புகாரின் நிலையையும் நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications